போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS 31-07-2023


போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS 31-07-2023


தேசியம் :-





 Card image cap

  • கேம்ஸ் 24x7 மற்றும் கைலாஷ்சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ‘இந்தியாவில் குழந்தைகள் கடத்தல்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டன.
  • இந்த ஆய்வின் அறிக்கைஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தைமுன்னிட்டு(ஜூலை 30) அன்று வெளியிடப்பட்டது.
  • அதில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 262 மாவட்டங்களில் 2016 முதல் 2022 வரையில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்

  • குழந்தைகள் கடத்தலில் உத்தரபிரதேசம்பிஹார் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
  • குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ள நகரங்களில் ஜெய்ப்பூர் முதலிடத்தில் உள்ளது.
  • டெல்லியைப் பொருத்தவரை கரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைவிட இப்போது குழந்தைகள் கடத்தல் 68 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இந்த காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 13,549 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 80 சதவீதம் பேர் 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். 13 சதவீதம் பேர் 9 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள். 2 சதவீதம் பேர் 9 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
  • பல்வேறு துறைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் ஓட்டல்கள் மற்றும் தாபாக்களில் அதிக அளவில் (15.6%) குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அடுத்தபடியாக வாகனங்கள் அல்லது போக்குவரத்துத் துறையும் (13%), ஆடை உற்பத்தித் துறையும் (11.18%) அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தி உள்ளது.

முக்கிய குறிப்பு

  • இந்தியாவில் குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை கடத்தலுக்கு எதிராக போராடியதற்காக கைலாஷ் சத்யார்த்திக்கு 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Card image cap
  • பிரதமர் நரேந்திர மோடிமாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற பெயரில் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றி வருகிறார்.
  • அந்த வகையில் இந்த ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று (30-ஆம் தேதி) மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி,  “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டிவரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக ‘என் மண்எண் தேசம்’ என்ற இயக்கம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
  • அந்த இயக்கத்தின் கீழ் அமுத கலச யாத்திரை நடத்தப்படும். அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 7,500 சிறிய அளவிலான கலசங்களில் மண் நிரப்பப்பட்டுஇந்த அமுதக்கலச யாத்திரை டெல்லியை வந்தடையும்.
  • அந்த கலசங்கள் கூடவே மரக்கன்றுகளும்செடிகளும் எடுத்து வரப்படும். அந்த கலசங்களில் உள்ள மண் அனைத்தும் டெல்லி தேசிய போர் நினைவிடத்துக்கு அருகே ஒன்றாகக் கொட்டப்பட்டுமரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு அந்த இடத்தில் அமுதப்பூங்காவனம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Card image cap
  • தமிழகத்தைச் சேர்ந்த 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அவை,
  1. திருவண்ணாமலை ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி
  2. நெல்லைவீரவநல்லூர் செடிபுட்டா சேலை
  3. கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் 
  • தமிழகத்தில் இதுவரை 58 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று இதுவரை 17 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புவிசார் குறியீடு - முக்கிய அம்சங்கள்

  • 1999 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1999) உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
  • உணவு பொருட்கள்வேளாண் பொருட்கள்கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள்,இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை
  • புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம்வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டுஅதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவது.
  • வணிக சின்னம் (Trade mark)காப்புரிமை (Patent) மற்றும் புவிசார் குறியீடு (Geographical indication) ஆகிய மூன்று விஷயங்களும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் வருகின்றன.இதில் புவிசார் குறீட்டை தவிர மற்ற இரண்டுமே தனி நபர்களுக்கான உரிமையை நிர்ணயிப்பதாக விளங்குகின்றன.
  • புவிசார் குறியீடு மட்டுமே குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொதுவான உரிமையாக விளங்குகிறது.
  • நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் - தமிழ்நாடு(58 பொருட்கள்)
  • தமிழகத்தில் முதன்முதலில் புவிசார் குறியீடு பெற்ற பொருள் - காஞ்சிபுரம் பட்டு
  • தமிழகத்தில் அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாவட்டம் - தஞ்சாவூர்
  • இந்தியாவில்  புவிசார் குறியீடு பெற்ற முதல் பொருள் - டார்ஜிலிங் டீ(2004)

தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருட்களின் பட்டியல்

  1. மல்லிகை                           – மதுரை
  2. சுங்குடிச் சேலை            - மதுரை
  3. பட்டு                                    – காஞ்சி
  4. பட்டு                                    - ஆரணி
  5. ஜமக்காளம்                      – பவானி
  6. தேயிலை                           - நீலகிரி
  7. பூட்டு                                   - திண்டுக்கல்
  8. மஞ்சள்                               - ஈரோடு
  9. மலைபூண்டு                    - கொடைக்கானல்
  10. பால்கோவா                     - ஸ்ரீவில்லிபுத்தூர்
  11. கண்டாங்கி சேலை       - காரைக்குடி
  12. பஞ்சாமிர்தம்                     - பழனி
  13. ஃபேப்ரிக் துணிகள்       - சேலம்
  14. வெண்பட்டு                       - சேலம்
  15. பட்டு புடவை                   - திருபுவனம்
  16. குத்துவிளக்கு                  - நாச்சியார்கோவில்
  17. நாதஸ்வரம்                     - நரசிங்கம்பேட்டை
  18. நெட்டி வேலைப்பாடு  - தஞ்சாவூர்
  19. தலையாட்டி பொம்மை – தஞ்சாவூர்
  20. கலைத்தட்டு                     - தஞ்சாவூர்
  21. கலைத்தட்டு தட்டு (இலட்சினை) - தஞ்சாவூர்
  22. வீணை                                 - தஞ்சாவூர்
  23. ஓவியங்கள்                      - தஞ்சாவூர்
  24. வெண்கலப் பொருட்கள் சுவாமிமலை
  25. வெண்கலப் பொருட்கள்(இலட்சினை)  சுவாமிமலை
  26. களம்காரி ஓவியங்கள்கருப்பூர்
  27. கிராம்பு                               - கன்னியாகுமரி
  28. மரச்சிற்பம்                       - கள்ளக்குறிச்சி
  29. மரச்சிற்பம்                         - அரும்பாவூர்
  30. கடலை மிட்டாய்           - கோவில்பட்டி
  31. பாய்                                       - பத்தமடை
  32. செட்டிநாடு கொட்டான்கள்காரைக்குடி
  33. கல்சிற்பம்                         - மகாபலிபுரம்
  34. கோயில் நகைகள்         - நாகர்கோவில்
  35. கோயில் நகைகள்(இலட்சினை)    - நாகர்கோவில்
  36. தோடா எம்பிராய்டரி   - நீலகிரி
  37. மலை வாழை                 - சிறுமலை
  38. மலை வாழை                 - விருப்பாச்சி
  39. வெட் கிரைன்டர்           - கோயம்புத்தூர்
  40. கோராப் பருத்திச் சேலைகோயம்புத்தூர்
  41. ஈத்தாமொழி நெட்டை தென்னை – கன்னியாகுமரி
  42. கிழக்கு இந்தியத் தோல்கள் - திருச்சி மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் தாவர முறையில் தோல்கள் பதனிடப்படுகின்றது.
  43. முறுக்கு - மணப்பாறை
  44. தேன் - மார்த்தாண்டம்
  45. தைக்கால் பிரம்பு வேலைப்பாடு மயிலாடுதுறை
  46. வெற்றிலை - ஆத்தூர்
  47. பன்னீர் திராட்சை - கம்பம்
  48. வெற்றிலை - சோழவந்தான்
  49. காட்டன் சேலை - நகமம்
  50. கல் சிற்பம் - மயிலாடி
  51. ஜவ்வரிசி - சேலம்
  52. மண்பாண்டம் - மானாமதுரை
  53. வர்க்கி - ஊட்டி
  54. முள்ளு கத்தரி - வேலூர்
  55. முண்டு மிளகாய் - ராமநாதபுரம்
  56. நாமக்கட்டி – திருவண்ணாமலை
  57. வீரவநல்லூர் செடிபுட்டா சேலை நெல்லை
  58. மட்டி வாழைப்பழம் கன்னியாகுமரி





Card image cap
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO)தகவல் தொடர்புதொலை உணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
  • மேலும்வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாகவும் விண்ணில் செலுத்துகிறது.
  • அதன்படிசிங்கப்பூருக்கு சொந்தமான ‘DS-SAR’ உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ISRO-வின் NewSpace India Limited(NSIL) அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
  • இதையடுத்து, PSLV C - 56  ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ISRO முடிவு செய்து,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய  ஏவுதளத்தில் இருந்து PSLV C - 56  ராக்கெட்டை நேற்று(ஜூலை 30) விண்ணில் செலுத்தியது.
  • இதில்முதன்மை செயற்கைக்கோளான DS-SAR செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது.
  • இந்த 'DS-SAR' செயற்கை கோள் DSTA (சிங்கப்பூர் அரசு) மற்றும் S.TEngineering இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • இதனுடன் VELOX-AM (23 கிலோ), ARCADE (24 கிலோ), SCOOB-II (4 கிலோ), NuLIoN (3 கிலோ) ,Galassia-2 (3.5 கிலோ) மற்றும் ORB-12 STRIDER (13 கிலோ) ஆகிய  செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
  • இந்த 6  சிறிய செயற்கைக்கோள்களும் சிங்கப்பூரின் உயர்கல்வி நிறுவனங்கள்மாணவர்களால் வடிவமைக்கப்பட்டவை. இவை பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும்.

முக்கிய குறிப்புகள்

  • 1993 முதல் இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 431 செயற்கைக்கோள்களைPSLV ராக்கெட் மூலம் ISRO விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.
  • சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 உள்ளிட்ட 2 செயற்கைக்கோள்கள் PSLV-55 ராக்கெட் மூலம் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
  • சிங்கப்பூர் நாட்டுக்காக மட்டும் இதுவரை முறை செயற்கைக்கோள்களை ISRO விண்ணில் செலுத்தியுள்ளது.

ISRO பற்றிய குறிப்புகள்

  • நிறுவனர்: விக்ரம் சாராபாய்
  • தலைமையகம்: பெங்களூரு
  • நிறுவப்பட்ட ஆண்டு : 15 ஆகஸ்ட் 1969
  • தற்போதைய தலைவர்: எஸ்.சோமநாத்




Card image cap
  • மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய் ஜூலை 29 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
  • மகாராஷ்டிரா ஆளுநர் - ரமேஷ் பாய்ஸ்
  • மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

முக்கிய குறிப்புக்கள்

  • உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு – 217
  • உயர் நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர்குடியரசுத் தலைவர்
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது- 62
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களின் தகுதி -  நீதி நிா்வாகப் பணியில் இந்திய நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புாிந்திருக்க வேண்டும்.
  • உயர் நீதிமன்றத்தின் நீதிப்பேராணை அதிகார வரம்பு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு(Writ Jurisdiction) - 226
  • மும்பை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஆகஸ்ட் 14,1862
  • இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றம் - கல்கத்தா உயர் நீதிமன்றம்( ஜூலை 1862)



// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran