நாளை (03.08.2023) 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாளை (03.08.2023) 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 


நாமக்கல் மாவட்டம் , கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும் , கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் வல்வில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி , நடப்பு ஆண்டில் எதிர்வரும் 2.8.2023 மற்றும் 3.8.2023 ஆகிய நாட்களில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது.


 இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் , பள்ளி , கல்லூரிகளில் பயிலும் மாணவ , மாணவியர்கள் , அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால் , எதிர்வரும் , 3.8.2023 ( ஆடி மாதம் 18 - ஆம் நாள் ) வியாழக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் , இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 128.2023 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு 03.08.2023 அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு 03.08.2023 அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீரன் சின்னமலை

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் - பெரியாத்தா தம்பதியருக்கு 1756ம் ஆண்டு  ஏப்ரல் 17ம் தேதி  மகனாகப் பிறந்தவர்  தீரன் சின்னமலை. தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்ட இவர்,   இளம் வயதிலேயே  வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்ற போர்க்கலைகளை கற்றுத்தேர்ந்தவர். மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் இணைந்து, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க   பல புதிய போர் யுக்திகளைக் கையாண்டு போராடினார். பல போர்களில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள் ஆத்திரமடைந்து தீரன் சின்னமலையை சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று தூக்கிலிட்டனர். 


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran