போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS 02-08-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS 02-08-2023


தேசியம் :-


Card image cap

  • OBC பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களை உள்பிரிவுகளாக வகைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்தகுதிகள்அளவீடுகள் குறித்த பரிந்துரைகளை அளிக்கும் வகையில் தில்லி உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஜி. ரோகிணி தலைமையில் ஓபிசி ஆணையம் கடந்த 2017-இல் அமைக்கப்பட்டது.
  • பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 13 முறைகள் நீட்டிக்கப்பட்டது.
  • OBC பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே சமச்சீரற்ற முறையில் இடஓதுக்கீட்டின் பயன்கள் சென்றடைவது குறித்து ஆராய்வதையும் இந்த ஆணையம் முக்கியப் பணிகளாக கொண்டிருந்தது.
  • இந்நிலையில்குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் ரோகிணி ஆணையத்தின் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டதாக மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • OBC மத்திய பட்டியலில் 2,600-க்கும் மேற்பட்ட சமூகப் பிரிவுகள் உள்ளன. இதில், 938 OBC உட்பிரிவுகளுக்கு இடஒதுக்கீட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. 
  • மேலும், 20 சதவீத சமூகங்கள் எந்தப் பலனையும் பெறவில்லை, 994 உட்பிரிவுகளும் வெறும் 2.68 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமே பெற்றுள்ளதாக ஆணையம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது.


தமிழ்நாடு :-



Card image cap

  • தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 

மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுடைய குடும்பத் தலைவிகள்

 

  • குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனப் பெயரிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
  • குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால்அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
  • திருமணமாகாத தனித்த பெண்கள்கைம்பெண்கள்திருநங்கைகள் தலைமையிலான குடும்பங்கள் இருந்தால்அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.
  • ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால்இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

பயனாளர்களின் பொருளாதாரத் தகுதிகள்

  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் கீழே உள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.
  • ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கும் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.
  • ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிடக் குறைவாகப் பயன்படுத்தும் குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது?

  • சொந்த பயன்பாட்டிற்காக கார்ஜீப்டிராக்டர்கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்போருக்கு கிடைக்காது.
  • ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம்விதவை ஓய்வூதியம்அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வுதியம் பெறும் குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காது.
  • மத்தியமாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காது
  • ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடைக்காது.
  • ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு கிடைக்காது.


பொருளாதாரம் :-


Card image cap

  • மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படிஜூலை மாத GST வசூல் 11% அதிகரித்து ரூ.1.65 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.
  • 2017 ஜூலையில் GST அமல்படுத்தப்பட்டதிலிருந்து 6-வது முறையாக GST வசூலானது ரூ.1.6 லட்சம் கோடி என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்குவர்த்தக நடவடிக்கைகள் அதிகரிப்பும்வரி ஏய்ப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுமே காரணம்.
  • நடப்பாண்டு ஜூலையில் மொத்தம் வசூலான ரூ.1,65,105 கோடி GST-யில்CGST ரூ.29,773 கோடியாகவும்SGST ரூ.37,623 கோடியாகவும்IGST ரூ.85,930 கோடியாகவும் உள்ளது.
  • செஸ் மூலமான வசூல் ரூ.11,779 கோடியாக உள்ளது.



விருதுகள் :-



Card image cap
  • 2023-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தேர்வு செய்யப்பட்டுளளார்.
  • "தகைசால் தமிழர்" விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கி. வீரமணிக்குரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்படும்.
  • கி. வீரமணி அவர்கள்இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, 'சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்குஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவர்.
  • 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்றுதொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து சிறப்பாக பணி செய்து வருபவர்.
  • உண்மைபெரியார் பிஞ்சு, The Modern Rationalist - (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும் செயல்பட்டு வருபவர்

முக்கிய குறிப்புகள்

  • தமிழ்நாட்டுக்கும்தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" விருது 2021-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
  • 2021-ஆம் ஆண்டில் விருது பெற்றவர் - என். சங்கரய்யா
  • 2022-ஆம் ஆண்டில் விருது பெற்றவர் - நல்லகண்ணு





பொருளாதாரம் :-



Card image cap

தோற்றம்

  • 1859-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரைஎன்ற சிற்றூரில் பிறந்த ஆபிரகாம் பண்டிதர்பங்களாச் சுரண்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்துதமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.

சித்த மருத்துவ ஆய்வு

  • 1879ஆம் ஆண்டு தேனியில் உள்ள சுருளி மலைகளில் ஆராய்ச்சிக்காக சென்ற அவர் தமிழ் மருத்துவ வல்லுநரான கருணானந்த முனிவரை குருவாக ஏற்றுக்கொண்டு தமிழ் மருத்துவ முறைகளை கற்று அறிந்தார்.
  • 1882-ஆம் ஆண்டு ஞானவடிவு பொன்னமாள் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் 1886-இல் குடும்பத்துடன் தஞ்சாவூரில் குடியேறினார்.
  • 1899-ஆம் ஆண்டு தஞ்சைக்கு அருகே 100 ஏக்கர் நிலத்தை வாங்கி ‘கருணானந்தபுரம்’ என்று பெயரிட்டு மூலிகை செடிகொடிமரங்களை பயிரிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.
  • மூலிகைகளைப் பயன்படுத்தி ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். இவர் தயாரித்த கோரசனை மாத்திரைஇந்தியாவில் மட்டுமல்லாமல்இலங்கைபர்மாசிங்கப்பூர்மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பைப்பெற்றது.
  • ஆபிரகாம் பண்டிதரின் இந்த பணிகளை பாரட்டி 1909-ஆம் ஆண்டு அவருக்கு ‘ராவ் சாகிப்’ பட்டத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது.

தமிழிசை ஆராய்ச்சி

  • பழந்தமிழ் இசை வடிவமே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் இசைக்கப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்காகமுதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார்.
  • சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்நாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இதன்மூலம் தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்தார்.
  • 1912-ஆம் ஆண்டு ‘சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை’ நிறுவினார்.
  • தமிழிசையை மீட்டெடுக்க 1912- ஆம் ஆண்டு முதல் 1914-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஆறு தமிழிசை மாநாடுகளை நடத்தினார்.
  • தனது பல்லாண்டு கால தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ என்ற இசை நூலாகத் தொகுத்து1917-இல் வெளியிட்டார். சுமார் 1,400 பக்கங்கள் கொண்ட இந்நூல் இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கான மூலநூலாக அமைந்துள்ளது.
  • 1911-இல் தஞ்சையில் முதல் மின் இயந்திர அச்சுக்கூடத்தை (லாலி பிரஸ்) உருவாக்கியுள்ளார். அந்த அச்சுக்கூடத்தில்தான் ‘கருணாமிருதசாகரம் முதல் புத்தகம்’ நூல் முழுவதுமாக அச்சிடப்பட்டது.
  • தமிழிசை குறித்த தனது ஆய்வின் மூலமாக சுத்த மத்திம ராகங்கள் 16, பிரதி மத்திம ராகங்கள் 16, எனவே 32 ராகங்கள் தான் தகுதி படைத்த ராகங்கள் எனவும்ஏழு சுவரங்கள் 12 சுரத் தாளங்களுள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு வீதம் சுருதிகளின் எண்ணிக்கை 22 அல்ல மொத்தம் 24, எனவே மொத்தம் 24 சுர முறைகள் என நிறுவினார்.

மறைவு

  • தமிழிசைக் கலைஞர்படைப்பாளிசித்த மருத்துவர் எனப் பல துறைகளிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்த ஆபிரகாம் பண்டிதர் 1919-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமது 60-வது வயதில் மறைந்தார்.

Card image cap
  • ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பால்(WHO) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதிவரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
  • உலக நாடுகளில் குரோஷியா (Croatia) தாய்ப்பால் ஊட்டலில் முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்தியாவில் தற்போது 55% சிசுக்களுக்கு மட்டுமே தாய்ப்பால் ஊட்டப் படுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  • உலகளாவிய அளவில் தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமாக்கினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,20,000 குழந்தை உயிர்கள் காப்பாற்றப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
  • 2023-ஆம் ஆண்டின் தாய்ப்பால் ஊட்டல் வாரத்தின் முக்கிய அம்சமாக`தாய்ப்பால் ஊட்டலை செயல்படுத்துதல் - பணியில் இருக்கும் பெற்றோர் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துதல்' என்ற செயல்திட்ட நோக்கம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.







// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran