போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS 01-08-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS 01-08-2023


தேசியம் :-


Card image cap

  • மகளிருக்கான சிறப்பு சேமிப்புத் திட்டத்தை (மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்)இந்தாண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
  • இத்திட்டத்தில் மகளிா் மற்றும் பெண் குழந்தைகள் பெயரில் நிரந்தர வைப்பு கணக்கு தொடங்க முடியும்.
  • இதற்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும்.
  • குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வைப்புத்தொகை இருக்கலாம்.
  • இதில் முதிா்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும். முதிா்வு காலத்துக்கு முன்பு பகுதியளவில் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.
  • குடும்பத் தலைவிகள் பெயரிலும்பெண் குழந்தைகள் பெயரிலும் பணத்தை சேமிப்புத் திட்டத்தில் வைப்பதை அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அஞ்சலகங்கள்அனைத்து பொதுத் துறை வங்கிகள் மற்றும் 4 தனியாா் வங்கிகள் மூலம் இப்போது இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டத்தில் இப்போது வரை 14.83 லட்சம் நிரந்தர வைப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.8,630 கோடி நிதி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

Card image cap
  • மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினர்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் பதிலளித்தார். அதில் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 4 சதவீத பேராசிரியர்கள் மற்றும் 6 சதவீத இணை பேராசிரியர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
  • இதர பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களின் எண்ணிக்கை பட்டியலினத்தை சேர்ந்தவர்களை விட குறைவாகவே உள்ளது என்றும் மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அளித்த புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • அதேநேரத்தில் 85 சதவீத பேராசிரியர்கள் மற்றும் 82 சதவீ இணை பேராசிரியர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
  • மேலும்,45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஐந்து துணை வேந்தர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

 

 

General

SC

ST

OBC

EWS

PwDs

Total

பேராசிரியர்கள்

1,146

96

22

60

3

14

1,341

இணை பேராசிரியர்கள்

2,304

231

69

187

7

19

2,817

துணை பேராசிரியர்கள்

8,734

1,421

625

1,901

192

225

13,098


தமிழ்நாடு :



Card image cap
  • முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2001 முதல் 2005 வரை பதிவு செய்த பெண் குழந்தைகளில் 18 வயது நிறைவடைந்த 1,40,003 பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை நிறுவனம் மூலம் ரூ 350.28 கோடி முதிா்வுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் 18 வயது நிறைவடைந்தும் முதிா்வுத்தொகை பெற பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்காமல் உள்ளனா்.
  • இந்நிலையில் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய தகுதியான குழந்தைகள் அனைவரும் ஒரு மாத காலத்துக்குள் தங்கள் பெயரில் தொடங்கிய புதிய வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகிமுதிா்வுத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என சமூக நல ஆணையா் அமுதவல்லி தெரிவித்துள்ளாா்.

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் பற்றிய குறிப்புகள்

  • 1992 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்திட்டம்அரசின் நேரடி முதலீட்டின் மூலம் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இத்திட்டத்தின்கீழ்ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின்அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு வைப்புத்தொகைக்கான  ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
  • ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பின்அப்பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது.
  • மேற்கூறிய வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு18 வயது நிறைவடைந்தவுடன்வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை வழங்கப்படும்.
  • பெண் குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளை ஈடுகட்ட 6-வது ஆண்டு முதல் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூ.1800/- வழங்கப்படுகிறது.

பயனாளர்களின் தகுதிகள்

  • குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
  • அதேநேரம் 2-வது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • பெற்றோர்களில் ஒருவர் 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும்.
  • மேலும் பெண் குழந்தைகள் 10-ஆம் வகுப்பு எழுதி, 18 வயது வரை குழந்தை திருமணம் புரியாமல்இருக்கும் நிலையில் அவர்களுக்கு வட்டியுடன் கூடிய வைப்புத்தொகைமுதிர்வுத் தொகையாக வழங்கப்படும்.

திட்டத்தின் நோக்கம்

  • பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் தக்கவைத்தலை ஊக்குவித்தல்
  • பெண் குழந்தைகளை 18 வயதுக்குப் பிறகே திருமணம் செய்ய ஊக்குவித்தல்.
  • இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையைப் பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல்.
  • பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல்.
  • பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை வலுப்படுத்துதல்.


Card image cap
  • செங்கல்பட்டில் ரூ.210 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா மின்கலன் பரிசோதனை மையத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஜூலை 31 அன்று  திறந்து வைத்தார்.
  • மேலும்மஹிந்திரா நிறுவனம் சார்பில்செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.290 கோடியில்மின் வாகன விபத்து பரிசோதனை ஆய்வகம் மற்றும் மின்கலன் கட்டுருவாக்க மையம் நிறுவும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில்தேசிய அளவில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.


Card image cap
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1,600 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜூலை 31 அன்று கையொப்பமானது.
  • இதன்படி மூலமாக 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.

முக்கிய நாட்கள் :-


Card image cap
  • இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் முத்தலாக் முறையை ஒழிக்க முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான ஆகஸ்ட் 1-ஆம் தேதி  இஸ்லாமிய பெண்கள் உரிமை தினமாக மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது.
  • தலாக் (விவாகரத்து) என்ற வார்த்தையை மூன்று முறை வெறுமனே சொன்னால் சில நிமிடங்களில் மனைவியிடம் இருந்து இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஆண் விவாகரத்து பெற்று விடலாம் என்பதை அனுமதிக்கும் முத்தலாக் எனும் இஸ்லாமிய நடைமுறைசட்டவிரோதம் என 2017ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • அதனை தொடர்ந்து,முத்தலாக் கூறி பெண்களை விவகாரத்து செய்யும் முறையை தடை செய்துமுத்தலாக்தடை சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 1,2019-இல் மத்திய அரசு இயற்றியது.
  • இதன்படி முத்தலாக் கூறி முஸ்லிம் பெண்களை விவாகரித்து செய்யும் ஆண்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்அபராதமும் விதிக்கலாம்.
  • இத்தினம் 2021-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.





// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran