போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 29-07-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 29-07-2023


தேசியம் :-


Card image cap

  • நாட்டின் பிறப்பு பாலின் விகிதமானது கடந்த 2014-2015-ஆம் ஆண்டு 918 ஆக இருந்த நிலையில், 15 புள்ளிகள் அதிகரித்து கடந்தாண்டு 933-ஆக உயா்ந்துள்ளது என மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் - ஸ்மிரிதி இரானி



Card image cap
  • நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 82 சதவீதம் அதிகரித்துள்ளன. அதுபோலஇளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களின் எண்ணிக்கையும் 110 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
  • கடந்த 2014-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 387 மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றிருந்த நிலையில்தற்போது 704-ஆக அதிகரித்துள்ளன. இது 82 சதவீத வளா்ச்சியாகும்.
  • இதன் மூலமாகஎம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 2014-இல் 51,348-ஆக இருந்தது தற்போது 1,07,948-ஆக உயா்ந்துள்ளது.
  • முதுநிலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கை 2014-இல் 31,185-ஆக இருந்தது தற்போது 67,802-ஆக உயா்ந்துள்ளது. இது 117 சதவீத வளா்ச்சியாகும்.

முக்கிய குறிப்புகள்

  • மத்திய சுகாதார அமைச்சர் -  மன்சுக் மாண்டவியா
  • நாட்டிலேயே அதிக எம்பிபிஎஸ் இடங்களை கொண்டுள்ள மாநிலம் - தமிழ்நாடு

சர்வதேசம் :-


Card image cap
  • லண்டன்நியூயார்க் ஆகிய நகரங்களின் வரிசையில் உலக நகரங்களின் கலாச்சார அமைப்பில் பெங்களூரு இணைந்துள்ளது. இந்தியாவில் இந்தப் பட்டியலில் இடம்பெறும் முதல் நகரம் என்ற பெருமையை பெங்களூரு பெற்றுள்ளது.
  • கடந்த 2021-ஆம் ஆண்டு உலக நகரங்களின் கலாச்சார அமைப்பை (WCCF) லண்டன் மேயர் அலுவலகம் உருவாக்கியது.
  • இதில் லண்டன்நியூயார்க்டோக்கியோ உள்ளிட்ட 40 மாநகரங்கள் அங்கமாக உள்ளன.
  • இந்த அமைப்பு அதன் உறுப்பு நகரங்களை ஆராய்ந்து அதன் மேம்பாடுபாதுகாப்புகலாச்சார ஊக்குவிப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆலோசனைகளை வழங்குகிறது.
  • லண்டன்நியூயார்க்,டோக்கியோ ஆகிய மாநகராட்சிகளின் அதிகாரிகள் உறுப்பு நகரங்களை பார்வையிட்டு அதனை மேம்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்குவர்.

தமிழ் நாடு :-


Card image cap

புதுமைப் பெண் திட்டம் பற்றிய குறிப்புகள்

  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண் திட்டம்” முதல்வரால் 05.09.2022 அன்று முதல் கட்டமாகவும், 08.02.2023 அன்று 2-ஆம் கட்டமாகவும் துவக்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உதவித் திட்டமாக மாற்றப்பட்டது.
  • இத்திட்டத்தின்படிமுதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு முதல் மூன்று ஆண்டுகளும் தொழிற்படிப்புகளில் பொறியியல் படிப்புக்கு முதல் நான்கு ஆண்டுகளும்மருத்துவக் கல்வியில் முதல் 5-ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படும்.
  • ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.
  • கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும். அஞ்சல்வழிக் கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது.
  • வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும்.
  • ஏற்கெனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவியரும்மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்புக்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

திட்டத்தின் நோக்கம்

  • பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
  • குழந்தை திருமணத்தை தடுத்தல்
  • மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.
  • பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல்
  • பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்தல்.
  • பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்
  • பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல்.

Card image cap
  • சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
  • ஆசிய ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி வரும் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
  • 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடைபெறும் இந்தப் போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்தவுள்ளது.
  • இந்தப் போட்டியில் இந்தியாசீனாபாகிஸ்தான்மலேசியாஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.
  • ஹாக்கிப் போட்டியை சிறப்பாக நடத்துவதற்காகஅரசின் சாா்பில் ரூ.17.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரம் :-


Card image cap

மத்திய வா்த்தகத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் எழுத்துபூா்வமாக மக்களவையில் அளித்துள்ள பதிலின் விவரம்:

  • கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி 36.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது2018-19-இல் 330.07 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, 2022-23-இல் 450.95 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளது.
  • அதேசமயம்இந்தியாவின் இறக்குமதி கடந்த ஐந்தாண்டுகளில் 38.8 சதவீதம் அதிகரித்து, 2018-19 இல் 514.07 பில்லியன் டாலரிலிருந்து 2022-23இல் 714.04 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளது.



விருதுகள் :-


Card image cap
  • 2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின், ‘சிறந்த மனிதருக்கான விருது’ தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
  • 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதைப் பாராட்டும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 1927-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
  • 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
  • இந்த நிலையில், “44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில்அதுவும் பல்லவர் கால சிற்பக் கலையினை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மாமல்லபுரத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற்றது.
  • இந்த போட்டியில் சர்வதேச அளவில் 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர்வீராங்கனைகள் பங்கேற்றனர்.
  • 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னம் - தம்பி


விருதுகள் :-


Card image cap
  • மேற்கு வங்க மாநிலம், மேட்னிபூர் அருகிலுள்ள பிர்சிங்கா எனும் ஊரில் தாகூர்தாஸ்பகவதி தேவி ஆகியோருக்கு செப்டம்பர் 26, 1820 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • வறுமையில் வளர்ந்தவர். தந்தை கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தபோது அங்கு ஆங்கிலம்சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.
  • 1839-இல் சமஸ்கிருத சட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். இவருக்கு சமஸ்கிருதக் கல்லூரி ‘வித்யாசாகர்’ எனும் பட்டத்தை அளித்தது.
  • இலக்கியம்வேதாந்தம்ஸ்மிருதிநியாய சாஸ்திரம்வானவியல் ஆகியவற்றில் புலமை பெற்றார்.
  • 1841-இல் வில்லியம் கல்லூரியில் சமஸ்கிருதத் துறையின் தலைவராக சேர்ந்தார்.
  • 1851 ஆம் ஆண்டு சமஸ்கிருத கல்லூரியின் முதல்வராக ஆனார்.
  • சமஸ்கிருத மொழியிலக்கணத்தின் சிக்கலான கருத்துக்களை எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய வகையில் அவற்றை வங்க மொழியில் விளக்கும் “உபக்ரமோனிகா” மற்றும் “ப்யாகாரன் கௌமுடி” எனும் இரண்டு நூல்களை எழுதினார்.
  • 1856 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் சீர்திருத்தவாதியான அமுல்யா அம்பாதியின் துணையுடன் “பரிஷா உயர்நிலைப் பள்ளியை” நிறுவினார்.
  • முற்போக்கு தன்மை உடையவராக இருந்த ஈஸ்வர சந்திர வித்யாசாகர்பெண் கல்வி முன்னேற்றம்விதவைத் திருமணம் போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக ஈடுபாடு உடையவராக இருந்தார்
  • இராஜா ராம்மோகன் ராயும் மற்றவர்களும் சமூகத்தைத் திருத்துவதற்கு மேலைநாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளின் துணையை நாடியபோது வித்யாசாகர் இந்து மறை நூல்களே
  • முற்போக்கானவை என வாதிட்டார்.
  • விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடைசெய்வதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறைநூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார்.
  • ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய்1856, ஜூலை 26-இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது.
  • 1860-இல் முதன் முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டு பெண்களின் திருமண வயது 10 ஆகவும்ஆண்களின் திருமண வயது 14 ஆகவும் மாற்றப்பட்டது. அப்பெருமை ஈஸ்வர் சந்திர வித்யாசாகரையே ச் சாரும்.
  • இவர் 1891 ஆம் ஆண்டில் ஜூலை 29 ஆம் நாள் தனது 70 வயதில் காலமானார்.



Card image cap
  • உலகெங்கிலும் புலிகள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி புலிகளை பாதுகாக்கும் நோக்கில் சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • 2010-ஆம் ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற சர்வதேச புலிகள் மாநாடில்புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி புலிகள் இனத்தை பாதுகாக்கும் வகையில் ஜூலை 29-ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாட தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய குறிப்புகள்

  • 1948 ஆம் ஆண்டு தேசிய சின்னங்கள் அறிவிக்கும் போது இந்திய தேசிய விலங்காக இருந்தது - ஆசிய சிங்கம்
  • வன விலங்குகள்காடுபல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்'வன உயிர் பாதுகாப்புச் சட்டம்' அமலுக்கு வந்த ஆண்டு - 1972
  • வங்காளப்புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்ட ஆண்டு -  1973
  • புலிகள் திட்டம் (project tiger) தொடங்கப்பட்ட ஆண்டு - ஏப்ரல் 1, 1973
  • புலிகள் திட்டம் (project tiger) தொடங்கப்பட்ட இடம் - ஜிம் கார்பெட் தேசிய பூங்கா,உத்ரகாண்ட்
  • ‘TX2’ திட்டம் (2022 ஆம் ஆண்டிற்குள் உலகின் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க) தொடங்கப்பட்ட ஆண்டு - 2010
  • புலிகள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடு - இந்தியா(உலக புலிகள் எண்ணிக்கையில் 70% இந்தியாவில் தான் உள்ளன)
  • இந்தியாவிலுள்ள புலிகள் காப்பகத்தின் எண்ணிக்கை - 54
  • தமிழகத்திலுள்ள புலிகள் காப்பகங்கள்-5 (களக்காடு முண்டந்துறைஆனைமலைமுதுமலைசத்தியமங்கலம்ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை)
  • தற்போது தமிழகத்தில் அதிக பரப்பளவுள்ள புலிகள் காப்பகம் - சத்தியமங்கலம்
  • புலிகள் கணக்கெடுப்பு துவங்கப்பட்ட ஆண்டு- 2006
  • இந்தியாவில் வாழும் புலிகளின் எண்ணிக்கை - 3,167(2022 கணக்கின்படி)
  • புலிகள் கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்- 4
  • புலிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் அமைப்பு - தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்
  • `தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA)’ அமைக்கப்பட்ட ஆண்டு- 2005
  • பூனைக் குடும்பத்தை சேர்ந்த புலிசிங்கம்சிறுத்தை உள்ளிட்ட மிருகங்களை பாதுகாக்க, 'சர்வதேச பெரிய பூனைகள் கூட்டணி (International Big Cat Alliance)' பிரதமர் மோடியால் ‘புலிகளின் 50 ஆண்டு நினைவாக’ இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடகாவில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran