போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 28-07-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 28-07-2023


தேசியம் :-



Card image cap

  • மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் வகையில்அரசியலமைப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய 5 சட்டத்திருத்தங்கள்

  1. சட்டப்பிரிவு 83 - நாடாளுமன்ற இரு அவைகளின் பதவிக்காலம்
  2. சட்டப்பிரிவு 85 - குடியரசுத் தலைவரால் மக்களவைக் கலைக்கப்படுவது
  3. சட்டப்பிரிவு 172மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம்
  4. சட்டப்பிரிவு 174 - மாநில சட்டப்பேரவைகளைக் கலைப்பது
  5. சட்டப்பிரிவு 356 - மாநிலங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சி

முக்கிய குறிப்புகள்

  • இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நாடாளுமன்ற தேர்தல்சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • இதுதவிர அரசுகள் கவிழும் பட்சத்திலும்கட்சி தாவல்களாலும்வேட்பாளர்கள் மறைந்தாலும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு நடத்தப்படும் தேர்தல்களினால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் என்பது மிக அதிகமாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான் 'ஒரே நாடுஒரே தேர்தல்' என்ற ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
  • ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்றத்துடன் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான். அவ்வாறு நடத்தும்போது பொதுமக்கள் ஒரே நேரத்தில் 2 வாக்குகள் செலுத்த வேண்டியது வரும். ஒன்று மாநில சட்டசபைக்குமற்றொன்று நாடாளுமன்றத்திற்கு என வாக்களிக்க வேண்டும்.
  • இந்தியாவில் 1951-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றம்சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது.
  • அதன் பிறகு1968 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டசபைகள் பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்ட பின்னர் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்படத் தொடங்கியது.


Card image cap
  • சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு பேறுகால விடுப்பு அளிக்கப்படுவதாகவும்ஆண்களுக்கு ஒரு மாத காலம் விடுப்பு வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு

  • பேறுகால நலச்சட்டம் 1961-இன் படி பெண்களுக்கு மாத விடுப்பு நடைமுறையில் உள்ளது.
  • தமிழகத்தை பொறுத்தவரை மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Card image cap
  • செமிகான் இந்தியா மாநாடு 2023’ என்ற பெயரில் செமிகண்டக்டர் மாநாடு குஜராத் தலைநகர் காந்திநகரில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ்சந்திரசேகர்குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
  • மைக்ரோன் டெக்னாலஜிஅப்ளைடு மெட்டீரியல்ஸ்ஃபாக்ஸ்கான், SEMI, AMD போன்ற செமிகண்டக்டர் துறையின் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
  • இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஏற்ற சூழலை அமைக்க வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் நோக்கம்


Card image cap
  • குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் ஹிராசர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
  • இது 2,500 ஏக்கர் நிலத்தில் ரூ,1405 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
  • இங்கு 3.04 கி.மீ நீளத்தில் 45 மீட்டர் அகலத்தில் நவீன ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இங்கு ஒரே நேரத்தில் 14 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். இது மாநிலத்தின் முதல் கிரீன்ஃபீல்டு விமான நிலையம் ஆகும்.
  • அதன்பின்சவுராஷ்டிரா நர்மதா அவதாரன் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் சவுராஷ்டிரா பகுதியில் 52,398 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். 95 கிராமங்களைச் சேர்ந்த 98,000 மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.

Card image cap
  • மணிப்பூர் விவகாரத்தில் அழுத்தம் கொடுப்பதற்காக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • சுதந்திர இந்திய வரலாற்றில் இது 28-வது நம்பிக்கையில்லா தீர்மானமாகும்

விதிமுறைகள்

  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 75,‘மக்களவையில்மத்திய அமைச்சரவைக்கு கூட்டுப் பொறுப்பு இருக்கிறது(Collective Responsibility)’ என்று சொல்கிறதே தவிரநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து அதில் ஏதும் இல்லை.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 118நாடாளுமன்றத்தின் அவைகள் தங்களது நடவடிக்கைகளுக்குத் தேவையான விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது.
  • அதன்படி மக்களவையின் விதி 198(Rule 198), நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான நடைமுறைகளை விவரிக்கிறது.
  • எந்த ஒரு மக்களவை உறுப்பினரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கலாம். ஆனால்அவருக்கு ஆதரவாக 50 மக்களவை உறுப்பினர்களின் கையெழுத்து இருக்க வேண்டும்.
  • மாநிலங்களவை உறுப்பினர்கள் அரசு மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தைக் கொண்டுவரவோஅது தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்கவோ முடியாது.
  • நாடாளுமன்ற மக்கள் அவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வரும்போதுஅதற்கான காரணத்தை உறுப்பினர் கூற வேண்டும் என்று அவசியம் இல்லை.
  • 50 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தரும் பட்சத்தில்நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதத்திற்கு தேதி அறிவிக்கப்படும். ஆதரவு கிடைத்த 10 நாட்களுக்குள் விவாதம் நடைபெற வேண்டும்.
  • மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மை நிரூபிக்கபடவில்லை என்றால் உடனே ஆட்சி கலைக்கப்படும்.

சுதந்திரத்திற்கு பின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானங்கள்

வ.

எண்

ஆண்டு

பிரதமா்

தாக்கல் செய்தவா்

ஆதரித்தோா்

எதிா்த்தோா்

1

1963

ஜவாஹா்லால் நேரு

ஆச்சாா்ய கிருபளானி

62

347

2

1964

லால் பகதூா் சாஸ்திரி

என்.சி.சாட்டா்ஜி (ஹிந்து மகாசபை)

50

307

3

1965

லால் பகதூா் சாஸ்திரி

எஸ்.என்.துவிவேதி (பிரஜா சோஷலிஸ கட்சி)

44

315

4

1965 

லால் பகதூா் சாஸ்திரி

எம்.ஆா்.மாசானி (சுதந்திர கட்சி)

66

318

5

1966

இந்திரா காந்தி

ஹிரேந்திரநாத் முகா்ஜி (இந்திய கம்யூனிஸ்ட்)

61

270

6

1966 

இந்திரா காந்தி

யு.எம்.திரிவேதி (பாரதிய ஜன சங்கம்)

36

235

7

1967

இந்திரா காந்தி

அடல் பிகாரி வாஜ்பாய் (பாரதிய ஜன சங்கம்)

162

257

8

1967

இந்திரா காந்தி

மது லிமயே (சம்யுக்த சோஷலிஸ கட்சி)

88

215

9

1968

இந்திரா காந்தி

பல்ராஜ் மதோக் (பாரதிய ஜன சங்கம்)

75

215

10

1968

இந்திரா காந்தி

கன்வா் லால் குப்தா (பாரதிய ஜன சங்கம்)

90

222

11

1969

இந்திரா காந்தி

பி.ராமமூா்த்தி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

86

215

12

1970

இந்திரா காந்தி

மது லிமயே (சம்யுக்த சோஷலிஸ கட்சி)

137

243

13

1973

இந்திரா காந்தி

ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

54

251

14

1974

இந்திரா காந்தி

ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி

15

1974

இந்திரா காந்தி

ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

63

297

16

1975

இந்திரா காந்தி

ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி

17

1978

மொராா்ஜி தேசாய்

சி.எம்.ஸ்டீபன் (காங்கிரஸ்)

குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி

18

1979

மொராா்ஜி தேசாய்

ஒய்.பி.சவாண் (காங்கிரஸ்)

வாக்கெடுப்புக்கு முன்பு தேசாய் ராஜினாமா செய்தார்

19

1981

இந்திரா காந்தி

ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸ் (சமதா கட்சி)

92

278

20

1981

இந்திரா காந்தி

சமா் முகா்ஜி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

86

297

21

1982

இந்திரா காந்தி

ஹெச்.என்.பகுகுணா (பாரதிய லோக் தளம்)

112

333

22

1987

ராஜீவ் காந்தி

சி.மாதவ ரெட்டி (தெலுகு தேசம் கட்சி)

குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி

23

1992

பி.வி.நரசிம்ம ராவ்

ஜஸ்வந்த் சிங் (பாஜக)

225

271

24

1992

பி.வி.நரசிம்ம ராவ்

அடல் பிகாரி வாஜ்பாய் (பாஜக)

111

336

25

1993

பி.வி.நரசிம்ம ராவ்

அஜய் முகோபாத்யாய (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

251

265

26

2003

அடல் பிகாரி வாஜ்பாய்

சோனியா காந்தி (காங்கிரஸ்)

189

314

27

2018

நரேந்திர மோடி

ஸ்ரீநிவாஸ் கேசினேனி (தெலுகு தேசம் கட்சி)

135

330

 

தோல்வியடைந்த நம்பிக்கை கோரும்(Confidence motion) தீா்மானங்கள்

  • ஆளும் அரசுகள் மீது எதிா்க்கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில்ஆளும் அரசால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கை கோரும் தீா்மானங்களும் தோல்வியைத் தழுவிய வரலாறு உள்ளது.
  • 1990-ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமா் வி.பி. சிங் தலைமையிலான அரசு நம்பிக்கை கோரும் தீா்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்தது. ராமா் கோயில் விவகாரத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதால்தீா்மானம் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது.
  • 1997-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமா் ஹெச்.டி. தேவெ கௌடா அரசு தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு 158 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனா். 292 எம்.பி. க்கள் எதிராக வாக்களித்ததால்தீா்மானம் தோல்வி அடைந்து அரசு கவிழ்ந்தது.
  • அடல் பிகாரி வாஜ்பாய் 1998-இல் ஆட்சி அமைத்து 13 மாத ஆட்சிக்குப் பிறகு 1999-ஆம் ஆண்டு ஏப்ரலில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தைத் தாக்கல் செய்தாா். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற்றதால்ஒரு வாக்கு வித்தியாசத்தில் தீா்மானம் தோல்வி அடைந்து வாஜ்பாய் பிரதமா் பதவியை இழந்தாா்.


தமிழ்நாடு :-


Card image cap
  • அரிய வகை தாவர இனங்களைப் பாதுகாக்க செங்கல்பட்டில் 137 ஹெக்டர் பரப்பில்சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைப்பது தொடர்பாக லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன்தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
  • சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்வனத் துறை அமைச்சர் மதிவேந்தன்இங்கிலாந்து அரசின் சுற்றுச்சூழல்உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சர் தெரஸ் கோஃபே ஆகியோரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.




தமிழ்நாடு :-


Card image cap
  • சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கொள்கையோடு ஆண்டுதோறும் ஜூலை 28-ஆம் தேதி உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2023-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: "காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்கள் மற்றும் கிரகத்தை நிலைநிறுத்துதல்"

முக்கிய குறிப்பு

  • உலகளாவிய இயற்கை பாதுகாப்பு சங்கம்(International Union for Conservation of Nature) தொடங்கப்பட்ட ஆண்டு - 1948



Card image cap
  • ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான ஜூலை 28-இல் அவரது நினைவாக ஆண்டுதோறும்  உலக ஹெபடைடிஸ்(கல்லீரல் அழற்சி) தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள்தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது.
  • 2023-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: 'One life, one liver'

முக்கிய குறிப்புகள்

  • ஹெபடைட்டிஸ் என்ற சொல்லுக்கு கல்லீரலின் வீக்கம் என்று பொருள்.
  • வைரஸ்கள் உள்ளிட்ட பிற தொற்றுகள்ஆல்கஹால் மற்றும் பிற இரசாயனங்கள் காரணமாக ஒருவருக்கு ஹெபடைட்டிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுகிறது. 
  • இவை நோயின் தாக்கத்தினைப்பொறுத்து ABCD மற்றும் E என வகைப்படுத்தப்படுகிறது.


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran