போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 25-07-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 25-07-2023


தேசியம் :-


Card image cap

  • அரசின் பொருளாதாரக் கொள்கையில் உள்ள தவறுகள்சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் உள்ள தோல்விகள்வெளிநாட்டு அச்சுறுத்தல்விவசாயிகள் - தொழிலாளர்கள் - சிறுபான்மையினர் நலன்கள் புறக்கணிப்பு போன்றவற்றுக்காக அரசின் மீது நம்பிக்கையில்லை என்று எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவரலாம்.
  • மேலும்,ஒரு அரசு தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டுமானால்மக்களவையில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர் பலத்தை பெற்றிருக்க வேண்டும். அப்படியொரு பலம் ஆளும் அரசுக்கு இல்லை என எந்தவொரு கட்சி உறுப்பினருக்கு சந்தேகம் வந்தாலும்நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியும்.
  • இதற்கு காரணங்கள் எதுவும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் மட்டுமே கொண்டுவர முடியும்.
  • மக்களவை விதிமுறை பிரிவு 198-இன் கீழ்நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து காலை 10 மணிக்கு முன்பாக மக்களவைத் தலைவரிடம் எழுத்துபூர்வமாக உறுப்பினர் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • அதைமக்களவைத் தலைவர் சபையில் வாசிப்பார். குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களது ஆதரவு இருந்தால்தான்நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு தகுதி பெறும்.
  • 50 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தரும் பட்சத்தில்நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதத்திற்கு தேதி அறிவிக்கப்படும். ஆதரவு கிடைத்த 10 நாட்களுக்குள் விவாதம் நடைபெற வேண்டும்.
  • மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மை நிரூபிக்கபடவில்லை என்றால் உடனே ஆட்சி கலைக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது இதுவரை கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானங்கள்

 

  • மத்திய அரசுக்கு எதிராக இதுவரை 27 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
  • ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது அவரது அரசு மீது 1963-ஆம் ஆண்டு ஜே.பி.கிருபளானி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். இதுதான் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம்.
  • இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது பல்வேறு காலகட்டங்களில் அரசுக்கு எதிராக 15 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் 4 தீர்மானங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ஜோதிர்மாய் பாசு கொண்டு வந்தார்.
  • லால் பகதூர் சாஸ்திரிநரசிம்மராவ் ஆகியோர் பிரதமராக இருந்த போது தலா முறையும்மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது முறையும்ராஜீவ் காந்திவாஜ்பாய் ஆகியோர் பிரதமராக இருந்த போது தலா ஒரு முறையும் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
  • 2018-இல் மோடி அரசு மீது 27-வது முறையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது வெற்றி பெறவில்லை.

முக்கிய குறிப்புகள்

  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 75,‘மக்களவையில்மத்திய அமைச்சரவைக்கு கூட்டுப் பொறுப்பு இருக்கிறது(Collective Responsibility)’ என்று சொல்கிறதே தவிரநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து அதில் ஏதும் இல்லை.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 118நாடாளுமன்றத்தின் அவைகள் தங்களது நடவடிக்கைகளுக்குத் தேவையான விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது.
  • அதன்படி மக்களவையின் விதி 198(Rule 198), நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான நடைமுறைகளை விவரிக்கிறது.


Card image cap
  • நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • மக்களவையின் 3-வது நாள் அமா்வில்தேசிய செவிலியா் ஆணைய மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
  • 1947-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய செவிலியா் குழும சட்டத்தை ரத்து செய்யவும்தேசிய செவிலியா் ஆணையத்தை அமைக்கவும் அந்த மசோதா வழிவகுக்கிறது.
  • அந்த ஆணையமானது நாட்டில் செவிலியா் பயிற்சி வழங்கும் கல்லூரிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
  • தேசிய அளவிலும்மாநில அளவிலும் செவிலியா்களுக்கான பதிவேட்டை உருவாக்கவும் அந்த மசோதா வழிவகுக்கிறது.
  • அதேபோல்தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதாவையும் மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
  • 1948-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பல் மருத்துவா்கள் சட்டத்தை ரத்து செய்வதற்கு அந்த மசோதா வழிவகுக்கிறது.
  • மேலும்தேசிய பல்மருத்துவ ஆணையத்தை அமைக்கவும் அது வழிவகுக்கிறது.



Card image cap
  • இந்தியாவின் ஜனநாயக சீர்திருத்த சங்கம்(Association for Democratic Reforms) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்துநாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது பதவியில் இருக்கும் எம்எல்ஏ.க்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது.
  • 28 மாநில சட்டப்பேரவைகள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் 4,033 எம். எல்.ஏ.க்களில் 4,001 பேரை இந்த ஆய்வு உள்ளடக்கியது.

ஆய்வில் கூறப்பட்ட தகவல்கள்

  • இந்தியா முழுவதும் 44 சதவீத எம்எல்ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
  • இவர்களில் 1,136 எம்எல்ஏ.க்கள் (28 சதவீதம்) மீது கொலைகொலை முயற்சிகடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
  • அதிகபட்சமாக கேரளாவில் மொத்தம் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
  • இதேபோல்பிஹாரில் 242 எம்.எல்.ஏ.க்களில் 161 பேர் (67 சதவீதம்)டெல்லியில் 70 எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் (63 சதவீதம்)மராட்டியத்தில் 284 எம்.எல்.ஏ.க்களில் 175 பேர் (62 சதவீதம்)தெலுங்கானாவில் 118 எம்.எல்.ஏ.க்களில் 72 பேர் (61 சதவீதம்)தமிழகத்தில் 234 எம்.எல்.ஏ.க்களில் 134 பேர் (60 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
  • மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும்அவர்களில் 14 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
  • 131 தி.மு. க எம்எல்ஏ.க்களில் 99 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன(76%)
  • 66 அ.இ.அ.தி.மு. க எம்எல்ஏ.க்களில் 15 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன(23%)





Card image cap
  • ராஜஸ்தானில் மகாத்மா காந்தி குறைந்தபட்ச வருமான உறுதி திட்ட மசோதா 2023 அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது.
  • இச்சட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகரங்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் 125 நாட்களுக்கு உத்தரவாதமாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் முதியோர்மாற்றுத் திறனாளிகள்விதவைகள்தனியாக வசிக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படும். இத்தொகை ஆண்டுதோறும் 15 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.
  • கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டப்படி 100 வேலை நாட்களை நிறைவு செய்யும் குடும்பத்துக்கு முதல்வர் கிராம வேலை உறுதி திட்டத்தின் கீழ் 25 நாள் கூடுதல் வேலை வழங்கப்படும்.
  • நகரங்களில் ஒரு குடும்பத்துக்கு இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தின்கீழ் 125 நாட்களுக்கு வேலை வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது

முக்கிய குறிப்பு

  • ராஜஸ்தான் முதல்வர் - அசோக் கெலாட்
  • ராஜஸ்தான் ஆளுநர் - கல்ராஜ் மிஸ்ரா





Card image cap
  • ஆந்திர மாநிலம்கர்னூல் மாவட்டம்மந்திராலயம் அருகே எமிங்கனூரு எனும் ஊரில் 10 ஏக்கரில்ரூ.300 கோடி செலவில் 108 அடி உயரத்தில் ஸ்ரீராமரின் பஞ்சலோக சிலை நிறுவப்பட உள்ளது
  • ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி மடம் சார்பில் இச்சிலை நிறுவப்படுகிறது.
  • இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி மூலம் கலந்துகொண்டுஅடிக்கல் நாட்டினார்.

Card image cap
  • தெலங்கானாவில் வசிக்கும் தகுதியான சிறுபான்மையினர் குடும்பத்தில் ஒருவருக்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.1 லட்சம் நிதி உதவி செய்வதாக தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகரராவ் அறிவித்துள்ளார்.
  • சிறுபான்மையினரான முஸ்லிம்கள்கிறிஸ்தவர்கள்சீக்கியர்கள்ஜைனர்கள்புத்தபாரசீக மதங்களை சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் சிறுபான்மையினர் நல வாரியம் மூலம் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு 100 சதவீத மானியத்துடன் ரூ.லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

விளையாட்டு செய்திகள்  :-

Card image cap
  • தென் கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.
  • இதில் இந்திய அணி 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 17 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்துடன் நிறைவு செய்தது.
  • சீனா 12 தங்கம் உட்பட 28 பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்தது.



// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran