போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 20-07-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 20-07-2023


தேசியம்:-


Card image cap

  • குஜராத் மாநிலத்தின் சூரத்தில் 35 ஏக்கரில் 9 செவ்வக வடிவ அமைப்புகளாக வைர வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது.
  • இந்த ஒவ்வொரு அமைப்புகளிலும் 15 மாடிகள் இருக்கிறது.
  • இந்த கட்டிடத்தைக் கட்டி முடிக்க நான்கு வருடங்களானது.
  • 4,700 அலுவலகங்கள் வரை இந்த கட்டிடத்தில் செயல்பட முடியும்.
  • அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ராணுவ அலுவலகமான பென்டகன் (Pentagon) உலகிலேயே மிகப்பெரிய கட்டிடமாக திகழ்ந்து வருகிறது.
  • இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் திறக்கப்பட உள்ள சூரத் வைர வர்த்தக மையம் `உலகிலேயே மிகப்பெரிய அலுவலகம்’ என்ற பெருமையைத் தட்டிச் செல்ல உள்ளது.
  • இந்த வைர வணிக மைய வளாகம் நவம்பர் மாதத்திலிருந்து செயல்படத் தொடங்கும் என்றும்பிரதமர் நரேந்திர மோடி இந்த வளாகத்தை திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.



Card image cap
  • மணிப்பூரில் உள்ள மெய்தேயி சமூகத்தினர் அவர்களை பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தான் தற்போதைய கலவரத்திற்கான காரணமாக இருக்கிறது.
  • மெய்தேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு பழங்குடியினத்தவராகிய குக்கி மற்றும் நாகா இன மக்கள் எதிர்த்தனர். மைத்தேயி இனத்தவர்கள் ஏற்கனவே வளம்செல்வாக்கும் மிகுந்தவர்கள்.
  • மணிப்பூரில் மொத்த மக்கள் தொகையில்53% அளவுக்கு பெரும்பான்மையாக உள்ள மெய்தேயி சமூகத்தினர் இம்பால் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். குகி மற்றும் நாகா பழங்குடியினர்மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். குகிநாகா பழங்குடியினர்மணிப்பூர் மக்கள் தொகையில் சுமார் 40% உள்ளனர்.
  • குகி சமூகத்தினர் பெரும்பாலானோர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். மெய்தேயி சமூகத்தில் பெரும்பாலானோர் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள்,  சிலர் பட்டியலின சாதிகளாக உள்ளனர். வேறு சிலர் பிற்படுத்தப்பட்டோராக உள்ளனர்.
  • நாடு சுதந்திரம் பெற்ற பின்குகி சமூகத்தினர் பழங்குடியினர் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
  • இதனால் குகி சமூகத்தினரிடம் உள்ள நிலங்களை மெய்தேயி சமூகத்தினர் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இது தான் மெய்தேயி சமூகத்துக்கும்குகி சமூகத்துக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
  • இந்நிலையில்,மெய்தேயி மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கினால் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பலன்கள் குறைவதுதோடு பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலமும் படிப்படியாக ஆக்கிரமிக்கப்படும் என பழங்குடியின மக்கள் அஞ்சுகின்றனர்.
  • இதை எதிர்த்து கடந்த மே 3-ஆம்  தேதி சுராசந்த்பூரில் பழங்குடியினர் பாதயாத்திரை மேற்கொண்ட நிலையில் மிகப்பெரிய மோதலாக வெடித்தது. இந்த கலவரம் காரணமாக 2 மாதத்துக்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து வருகிறது.
  • கலவரத்தில் மெய்தேயிகுக்கி என இரு தரப்பும் வன்முறைக்கு ஆளாகி இடம்பெயர்ந்திருந்தாலும்பழங்குடியினர் அத்தோடு கிறித்தவர்கள் என்பதால் குக்கி மக்களே பெருமளவு வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
  • இந்த கலவரத்தில் இதுவரை 250 கிறிஸ்தவ தேவாலயங்கள், 17 இந்துக் கோவில்கள் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர்.60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு :-




Card image cap
  • மகளிருக்கு சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத் திட்டம், 2021 ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுஅன்றைய தினமே அரசாணை வெளியிடப்பட்டு மறுநாளே (மே 8) நடைமுறைக்கு வந்தது.
  • தொடங்கப்பட்ட தினத்திலிருந்து இந்தத் திட்டத்த்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை - 311.61 கோடி
  • இதற்கான கட்டணத் தொகை - ரூ.4,985.76 கோடி
  • மூன்றாம்பாலினத்தவர்கள் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை - 18.04 லட்சம் (கட்டணத் தொகை ரூ. 288.64 இலட்சம்)
  • மாநிலத்தில் மொத்தம் இயக்கப்படும் 9,620 நகரப் பேருந்துகளில் 74.46% பேருந்துகள் மகளிருக்காக கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன.
  • 2023-24 ஆம் நிதி ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 49.06 லட்சம் மகளிர் பேருந்தில் பயணிக்கின்றனர்.
  • மொத்தம் பயணிக்கும் பயணிகளில் மகளிர் பங்கு66.03%
  • மூன்றாம் பாலினத்தவர்கள் சுமார் 3,013 பேர் நகர பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
  • மாநிலத் திட்டக்குழுவால் நடத்தப்பட்ட ஆய்வின்படிஇத்திட்டத்தின் மூலம் சராசரியாக மகளிர் சேமிக்கும் தொகை மாதம் ரூ. 888/- என கணக்கிடப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்திற்காக தமிழக அரசு 2023-24-ஆம் நிதி ஆண்டில் ரூ. 2,800 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
  • பயனர்களில், 39% பேர் பட்டியல் இனப் பெண்கள், 21% பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள், 18% பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் எனவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
  • மேலும்பெண் பயணிகளில் கிட்டத்தட்ட 50% பேர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

பொருளாதாரம் :-


Card image cap
  • கடந்த நிதியாண்டில் (2022-23) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் மொத்த நேரடி வரி வசூல் ரூ.1,24,414 கோடி ஆகும். இதில் நேரடி நிகர வரி வசூல் ரூ.1,08,364 கோடி ஆக உள்ளது.
  • இதன் மூலம் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் தேசிய அளவில் 4-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
  • நேரடி நிகர வரி வசூலான ரூ.1,08,364 கோடியில்ரூ.60,464 கோடி மூலத்தில் கழிக்கப்பட்ட வரி(Tax Deducted at Source - TDS) மற்றும் மூலத்தில் சேகரிக்கப்பட்ட வரி(Tax Collected at Source -TCS) வகையில் வசூலாகியுள்ளது. இது நிகர வரி வசூலில் 56 சதவீத பங்கு ஆகும்.
  • மேலும் நாட்டிலேயே முதல் முறையாக வருமான வரித்துறையின் வரலாற்றில் முதல் முயற்சியாக 'TDS நண்பன்' என்ற பெயரில்பல்வேறு விதிகள்கட்டணங்கள்பணம் அனுப்புவதற்கான காலக்கெடு மற்றும் அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுதண்டனை விதிகள் போன்ற TDS தொடர்பான கேள்விகளுக்கு பிரத்யேகமாக தகவல்களை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் 'Chatbot' செயலியை சென்னை வருமான வரி முதன்மை தலைமை ஆணையா் சஞ்சய் குமாா் வா்மா தொடங்கி வைத்துள்ளாா்.

முக்கிய குறிப்பு

  • நேரடி வரி வசூலில் தேசிய அளவில் முதலிடத்திலுள்ள மாநிலம் - மகாராஷ்டிரா

நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-


Card image cap
  • 1988-ஆம் ஆண்டு அரியானா பிரிவு ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் யாதவாவை ரயில்வே பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநரக தலைவராக நியமித்து பணியாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • மேலும்,இந்திய கடலோர காவல்படையின் 25வது இயக்குனராக மூத்த அதிகாரி ராகேஷ் பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :-


Card image cap
  • FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 9-வது பதிப்பை ஆஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து இணைந்து நடத்துகின்றன.
  • இப்போட்டிகள் இன்று (ஜூலை 20) தொடங்கி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  • மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்கிறது. இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.
  • மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து - நார்வே அணிகள் மோதுகின்றன.
  • உலகக் கோப்பை தொடரின் அனைத்து ஆட்டங்களையும் தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

முக்கிய குறிப்புகள்

  • FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து முதன்முறையாக நடைபெற்ற ஆண்டு - 1991
  • அதிக முறை FIFA மகளிர் உலகக் கோப்பையை வென்ற அணி - அமெரிக்கா(மூன்று முறை)

முக்கிய நாட்கள்:- 


Card image cap
  • ஒவ்வோரு ஆண்டும் ஜுலை 20-ஆம் தேதி சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது.
  • 1924-ஆம் ஆண்டு உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) பாரிஸ் மாநகரில் உருவாக்கப்பட்டதன் நினைவாக ஜூலை 20-ஆம் தேதியை உலக செஸ் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று 2019-ஆம் ஆண்டு UNESCO முன்மொழிந்து தற்போது பல்வேறு நாடுகளில் FIDE முன்முயற்சியின் பேரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • உலக செஸ் தினத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: making the game universal and more accessible to everyone




// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran