போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 18-07-2023

 போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  18-07-2023


தேசியம்:-


Card image cap

  • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
  • ஒட்டுமொத்தமாக திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த பேரும் பாஜகவை சேர்ந்த பேரும் மாநிலங்களவை எம்பிக்களாகி உள்ளனர். மாநிலங்களவையில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன.
  • இதில் பாஜகவின் பலம் 93 ஆக உயர்ந்துள்ளது. பாஜக கூட்டணியின் பலம் 105 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலங்களவை பற்றிய தகவல்கள்

  • மொத்த உறுப்பினர்கள் : 250 மிகாமல் இருத்தல் வேண்டும்
  • தற்போதுள்ள உறுப்பினர்கள் : 245
  • இதில் 233 உறுப்பினர்கள்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • நியமன உறுப்பினர்கள் : 12 ( மத்திய அரசின் பரிந்துரையின்படி கலைஇலக்கியம்அறிவியல்விளையாட்டு என்று துறைசார் சாதனையாளர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்)
  • மாநிலங்களவையின் தலைவராகச்செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்
  • ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும்  தேர்ந்தெடுக்கப்பட  வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசியலமைப்பின் நான்காவது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
  • மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்கள் கொண்ட மாநிலம் - உத்திர பிரதேசம்(31)
  • மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் எண்ணிக்கை - 18
  • மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கொண்ட யூனியன் பிரதேசம் - டெல்லி(3) மற்றும் புதுச்சேரி(1)

மாநிலங்களவை உறுப்பினராவதற்கானத் தகுதிகள்

  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • அரசாங்கத்தில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.

மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக் காலம்

  • மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை ஆகும்.
  • அதனைக் கலைக்க முடியாது.
  • மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.
  • அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர்.

தேர்தல் முறை

  • தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் (MLA’s) ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் (மறைமுக தேர்தல்).
  • இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.


தமிழ்நாடு:-



Card image cap
  • ஆகஸ்ட் 15, 1947 - இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு `மெட்ராஸ் பிரசிடென்ஸிமெட்ராஸ் மாகாணமாக மாறியது.
  • அன்றைய தமிழ்நாடு என்பதுகடலோர ஆந்திராராயலசீமாவட கேரளாவின் மலபார் பகுதி மற்றும் தென்கனராவின் பெல்லாரி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும்.
  • அக்டோபர் 1,1953- கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகள் ஆந்திர மாநிலமாகப் பிரிக்கப்பட்டன (மொழிவாரியாக உருவான முதல் மாநிலம்)
  • நவம்பர் 1,1956 - மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலமாகமாநிலத்தின் எல்லைகள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுமறுசீரமைப்பு செய்யப்பட்டன.
  • இந்த சட்டத்தின் மூலம் மெட்ராஸ் மாகாணத்தின் மேற்கு கடற்கரைப் பகுதிகள் கேரளாவுக்கும்கர்நாடகத்துக்கும் பிரிந்து சென்றன. வட பகுதி ஆந்திர மாநிலத்துக்குச் சென்றது. எஞ்சிய நிலப்பகுதி மெட்ராஸ் மாநிலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
  • ஜூலை 27, 1956மெட்ராஸ் எனும் பெயரை மாற்றி 'தமிழ்நாடுஎன்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துத் தியாகி சங்கரலிங்கனார் அவர்கள்விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார்.
  • அக்டோபர் 13, 1956-  தம் உண்ணாவிரத்தில் உறுதியாக இருந்த சங்கரலிங்கனார்,  76-வது நாளில் உயிர் துறந்தார்.
  • மே 7, 1957- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நுழைந்த திமுகதமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டுமென்று  தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகள்எதிர்த்து 127 வாக்குகள் பதிவாகி திமுகவின் முதல் தீர்மானம் தோல்வியடைந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ்நாடு கோரிக்கையை திமுக முன்னெடுத்துச் சென்றது.
  • ஜனவரி 30,1961 -  தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஷோஷலிஸ்ட் உறுப்பினர் பி.சின்னத்துரை கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் விவாதத்துக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை.
  • பிப்ரவரி 24, 1961 - தமிழில் மட்டும் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் குறிப்பிடத் தீர்மானிக்கப்பட்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால்ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்றே அழைக்கப்பட வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தியது.
  • மார்ச், 1961 - நாடாளுமன்ற மாநிலங்களவையில் புபேஷ் குப்தாதமிழ்நாடு என பெயர் மாற்றம் வேண்டி தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். புபேஷ் குப்தாவோடு அந்த அவையில் உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணாதமிழ்நாட்டு வரலாற்றுத் தரவுகளிலிருந்தும் பரிபாடல்சிலப்பதிகாரம்மணிமேகலைதொல்காப்பியம் என்று எடுத்துச் சொல்லி தமிழ்நாடு என்று பெயரிட வேண்டுமென்று புபேஷ் குப்தாவின் மசோதாவை ஆதரித்து பேசினார். எனினும் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.
  • ஜுலை 23, 1963தமிழ்நாடு சட்டமன்றத்தில் திரும்பவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் இராம அரங்கண்ணல் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானமும் தோல்வியில் முடிந்தது.
  • ஜூலை 18, 1967 - திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அன்று தமிழகச் சட்டமன்றத்தில் ‘மெட்ராஸ் மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்கிற தீர்மானத்தை அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றினார்.
  • மேலும், "தமிழ்நாடு என்று பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேறியவரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில் `தமிழ்நாடு வாழ்கஎன்று நாம் வாழ்த்துவோம் என்று கூறிவிட்டு, `தமிழ்நாடுஎன முறை குரல் எழுப்பினார் அண்ணா.
  • நவம்பர் 23, 1968- நாடாளுமன்றத்தில் மெட்ராஸ்  மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு’ எனும் பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது.
  • டிசம்பர் 1, 1968 - தமிழ்நாடு பெயர் சூட்டு விழா  பாலர் அரங்கத்தில் (இன்றைய கலைவாணர் அரங்கம் அமைந்த இடம்) நடைபெற்றபோதுஉடல் நலிவுற்ற நிலையிலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த வரலாற்று நிகழ்வில் உரை நிகழ்த்தினார்.
  • ஜனவரி 14,1969  தமிழ்நாடு என்ற பெயர் முறைப்படி மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
  • அக்டோபர் 9,2021 - நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ஆம் தேதி ‘தமிழ்நாடு தினம்’ கடைப்பிடிக்கப்படும் என்று  சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
  • முன்னதாக 2019-இல்இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு மாநில தினமாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை அப்போதைய அரசு வெளியிட்டது. தற்போது இத்தினம் ஜூலை 18-க்கு மாற்றப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு என்னும் பெயர் எளிதில் கிடைத்து விடவில்லை பல தலைவர்களின் போராட்டங்களுக்குப் பிறகும் உயிர் தியாகங்களுக்குப் பிறகும் தான் நம் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது என்பது நினைவுகூறத்தக்கது.


Card image cap

  • வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் வைப்பாற்றின் கரையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2021-இல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
  • அதில்இதுவரை சுமார் 3,500-க்கும் மேற்பட்ட பழங்காலப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • 2-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள்கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • கடந்த வாரம் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் ஆன சுடுமண் பானை ஓடுகள்அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகளும் அதனைத் தொடர்ந்துஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.
  • இந்நிலையில்தற்போது சுடு மண்ணால் செய்யப்பட்ட தோசைக் கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



முக்கிய நாட்கள்:-


Card image cap
  • நெல்சன் மண்டேலாவின் தியாகத்தை போற்றும் வகையில்அவர் பிறந்த ஜூலை 18-ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டும் "சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக" ஐ.நா. சபை அறிவித்து கொண்டாடி வருகிறது.
  • உரிமைக்காகப் போராடிய இவரது நடவடிக்கைகள் கண்டிக்கப்பட்டுதண்டனை விதிக்கப்பட்டு 27 ஆண்டுகள் சிறையில் வாடியவர்.
  • நிறவெறிக்கு எதிராக வன்முறையற்ற அறப் போர் செய்த நெல்சன் மண்டேலா  தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பினைப் பெற்றவர்.
  • 2009 இல்ஐநா பொதுச் சபையில் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு மண்டேலாவின் முன்னாள் பங்களிப்புகளை அங்கீகரிக்க மண்டேலா தினம் உருவாக்கப்பட்டு 2010 முதல் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • ஒரு சாதாரண மனிதனாக பிறந்துமக்களுக்காகப்போராடும் ஒரு போராளியாகஅரசியல்வாதியாகசிறைக் கைதியாகஜனாதிபதியாக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்துக்கொண்ட நெல்சன் மண்டேலா2013 டிசம்பர் 5-ஆம் நாள் தனது 95-வது வயதில் மறைந்தார்.

மண்டேலா பெற்ற விருதுகள்

  • இந்திய அரசு  உலக அமைதிக்காக நெல்சன் மண்டேலா ஆற்றிய அரும்பணியைப் பாராட்டி அவருக்கு "நேரு சமாதான விருது" வழங்கியது.
  • மேலும் 1990-ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னாவிருது வழங்கப்பட்டது.
  • 1993-ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்யாகிரக அமைப்புஅமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான "மகாத்மா காந்தி சர்வதேச விருதை" நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது.


Card image cap
  • இந்திய விடுதலைச் சட்டம், 1947 (Indian Independence Act 1947) என்பது பிரிட்டிஷ் இந்தியாவுக்கு விடுதலை அளிப்பதற்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம்
  • ஜூன் 15, 1947 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறிய இச்சட்டத்துக்கு ஜூலை 18-ஆம் தேதி மன்னர் ஆறாம் ஜார்ஜின் ஒப்புதல் கிடைத்தது.
  • மவுண்ட்பேட்டன் பிரபுவால் உருவாக்கப்பட்ட ஜூன் திட்டத்தின் அடிப்படையில் இச்சட்டம் இயற்றப்பட்டது.

இந்திய விடுதலைச் சட்டத்தின், 1947 முக்கிய கூறுகள்

  • இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஆகஸ்ட் 15,1947 முதல் நடைமுறைக்கு வரும்.
  • இவ்விரு நாடுகளும் இரண்டு தனி டொமினியன்களாக மாற்றப்பட்டு அதிகாரங்கள் வழங்கப்படும்.
  • ஒவ்வொரு டொமினியனுக்கும்தலைமை ஆளுநர் இருப்பார். அவர் அரசியலமைப்பின் தலைவராக இருப்பார்.
  • 2 டொமினியன்களின் அரசியலமைப்பு நிர்ணய சபைகளும் அந்தந்த டொமினியன்களின் விருப்பங்கள்தேவைக்கு ஏற்ப உருவாக்கப்படும்.
  • இந்த அரசியல் அமைப்பு நிர்ணய சபைகளே மத்திய சட்டமன்றமாகவும் செயல்படும்.
  • நடைமுறையில் ஏற்கனவே உள்ள சட்டங்கள்திருத்தங்கள் செய்யும் வரை நடைமுறையில் இருக்கும்.
  • 1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டத்தின் அமைப்புகள்செயல்முறைகள் செயல்படும்.
  • தலைமை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் நீக்கப்படும்.
  • இந்திய சிவில் சர்விஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிற தனிச் சலுகைகளும்அதிகாரங்களும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
  • மன்னரால் ஆட்சி செய்யப்பட்ட சமஸ்தான அரசுகள் அவைகளின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்திய யூனியனிலோபாகிஸ்தானுடனோ அல்லது தனியாகவோ செயல்படலாம்.
  • பஞ்சாப் வங்காளம் இவ்விரண்டு மாகாணங்களின் எல்லைகளை வரையறுப்பதற்கு எல்லை வரையறுக்கும் ஆணையம் (Boundary Commission) ஏற்படுத்தப்படும்

முக்கிய குறிப்புகள்

  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான எல்லைகளை வரையறுக்க “ரேட்கிளிப்” தலைமையில் அமைக்கப்பட்ட  ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் பாகிஸ்தானுடன் மேற்கு பஞ்சாப்சிந்துபலுசிஸ்தான்கிழக்கு வங்காளம்வடமேற்கு எல்லை மாகாணம்அசாமில் உள்ள சில்ஹெட் மாவட்டம் சேர்க்கப்பட்டது.
  • சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் - மௌண்ட்பேட்டன்
  • சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய  தலைமை ஆளுநர் - ராஜாஜி
  • பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் - முகமது அலி ஜின்னா



தரவரிசை பட்டியல் :-


Card image cap
  • நிதி ஆயோக் வெளியிட்ட 2022 ஆம் ஆண்டுக்கான 'ஏற்றுமதி தயார்நிலை குறியீடு(Export Preparedness Index) பட்டியலில்குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை பின்தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்த பட்டியலில் தமிழ்நாடு 80.89 புள்ளிகள் பெற்றுள்ளது.
  • 78.20 புள்ளிகளுடன் மகாராஷ்டிரா இரண்டாமிடத்திலும்76.36 புள்ளிகளுடன் கர்நாடகா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
  • முந்தைய 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் முதலிடம் வகித்து வந்த குஜராத் மாநிலம் 73.22 புள்ளிகளுடன் நான்காம் இடத்துக்கு சரிந்துள்ளது.
  • நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஏற்றுமதி தயார்நிலைப் பட்டியல்கடலோர மாநிலங்கள்மலைப்பகுதி மாநிலங்கள்நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்கள் என உட்பிரிவுகளை கொண்டுள்ளது.
  • மலைப்பாங்கான மாநிலங்களில் முதலிடம் - உத்தரகண்ட்
  • நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளில் முதலிடம் - ஹரியானா
  • யூனியன் பிரதேசங்கள்சிறிய மாநிலங்கள் பிரிவில் முதலிடம் – கோவா

முக்கிய குறிப்புகள்

  • ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு என்பது ஏற்றுமதி சார்ந்து மாநிலங்களின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கண்டறிதல்அரசுக் கொள்கைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் வசதியளிக்கும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகும்.
  • 2020-ஆம் ஆண்டு முதல் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டு வருகிறது.
  • தற்போது 3-வது தயார்நிலைக் குறியீடு பட்டியலை வெளியிட்டவர் - நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி(பி.வி.ஆர்.சுப்ரமணியம்)





// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran