போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 14-07-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  14-07-2023


தேசியம் :-


Card image cap

  • இந்தியாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட திருநர்கள்  இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலும்சமூகத்தாலும் உறவினர்களாலும் புறக்கணிக்கப்பட்டு தனது சொந்த முயற்சியினால் முன்னேறி வருகின்றனர்.
  • அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் முயற்சியில் Pride Project’ என்ற புதிய திட்டத்தினை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த திட்டமானது திருநர் சமூகத்தினருக்கான பொருளாதாரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருநர்களுக்காக கேரளா அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள்

  • சாகல்யம் - திருநர்களுக்கான தொழிற்பயிச்சி அளிக்கும் திட்டம்
  • வர்ணம்  -  திருநர்களுக்கான தொலைதூரக்கல்வி வழங்கும் திட்டம்
  • யத்னம் - திருநர்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம்
  • ஸஃப்லம் - திருநர்களுக்கான தொழிற்கல்வி அளிக்கும் திட்டம்

முக்கிய குறிப்புகள்

  • திருநர்களுக்கான நலவாரியம் அமைத்த முதல் மாநிலம் - தமிழ்நாடு(2008)
  • திருநர்களுக்கான தனி நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை(ஏப்ரல் 15,2008) நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் திருநங்கையர் தினம் 
  • ஏப்ரல் 15-இல் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ்நாடு :-


Card image cap

  • அரசு ஐடிஐ.க்களில் தற்போது ஃபிட்டர்டர்னர்மெசினிஸ்ட்எலக்ட்ரீசியன்வெல்டர்ஏசி மெக்கானிக் போன்ற 78 தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
  • மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு 71 அரசு ஐடிஐ.க்களை ரூ.2,877.43 கோடியில் ‘தொழில் 4.0’ தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த திட்டமிட்டது.
  • அதன்படிஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ‘தொழில் 4.0’ தரத்திலான தொழில்நுட்ப மையங்களை உருவாக்க தமிழக அரசுடாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் 2022-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
  • இதன் முதற்கட்டமாக, 2022-ஆம் ஆண்டு  22 அரசு ஐடிஐ.க்களில் ஐடிஐ.க்களில் அமைக்கப்பட்ட ‘தொழில் 4.0’ தொழில்நுட்ப மையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • அதன் தொடர்ச்சியாகஇரண்டாம்  கட்டமாக தற்போது 45 அரசு ஐடிஐ.க்களில் ரூ.1,559.25 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘தொழில் 4.0’ தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • இதன்மூலம் அரசு ஐடிஐ.க்களில் ஆண்டுதோறும் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவர்.
  • இத்திட்டத்தை 87.5:12.5 என்ற விகிதத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனமும்தமிழக அரசும் முதலீடு செய்து செயல்படுத்துகிறது.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-


Card image cap
  • சந்திரயான் திட்டத்தின் பகுதியான மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3 விண்கலம் LVM 3-M 4 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • பிறகு வெற்றிகரமாகப் பயணித்து பூமியிலிருந்து 179 கி.மீ. தொலைவில்நீள் வட்டப்பாதையில் சந்திரயான் - 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
  • சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும். இது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல்(லேண்டர்) மற்றும் உலாவுதல்(ரோவர்) கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
  • நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக 2019-ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தின் லேண்டர் கலன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவின் தரையில் மோதி உடைந்தது. அதேநேரத்தில்விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
  • ஏற்கனவேஆர்பிட்டர் நிலவை சுற்றிவருவதால்இந்த முறை லேண்டர்ரோவர் விண்கலங்கள் மட்டும் அனுப்பப்பட்டுள்ளது.
  • தற்போது அனுப்பப்பட்டுள்ள லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் உந்து கலன்(Propulsion Unit) மூலம் புவி வட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லப்படும்.
  • அதன்பின் உந்து கலனிருந்து லேண்டா் பிரிந்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். ஆகஸ்ட் இறுதியில்தான் நிலவில் அது இறங்கும்
  • தொடா்ந்து லேண்டரிலிருந்து ரோவா் கலன் வெளியில் வந்து 14 நாள்கள் நிலவின் தன்மையையும்சூழலையும் ஆய்வு செய்ய உள்ளது.
  • இந்த திட்டம் வெற்றியடைந்தால்அமெரிக்காரஷ்யாசீனா ஆகிய நாடுகளுக்கு பிறகுநிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

திட்டத்தின் நோக்கம்

  • நிலவின் தென் துருவத்தில் உறைந்திருக்கும் பனிக்கு அடியில் பல லட்சம் ஆண்டுகளாக பாறைகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. அவற்றை ஆராய்வதன் மூலம்இந்த சூரிய மண்டலமும் பூமியும் எப்படி வடிவம் எடுத்தன என்பதை அறிய முடியும்.
  • செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் பல நாடுகள் இறங்கியுள்ளன. பூமியிலிருந்து இதற்கான ராக்கெட்களை அனுப்புவதை விடநிலவிலிருந்து அனுப்புவது எளிது. நிலவுக்கு வளிமண்டலம் எதுவும் இல்லை. புவிஈர்ப்பு விசையும் மிகக்குறைவு. எனவேஅங்கிருந்து ராக்கெட்களை ஏவுவதற்குக் குறைந்த ஆற்றலே தேவைப்படும். நிலவில் ஓர் ஏவுதளம் அமைத்துவிட்டால்அங்கிருந்து விண்கலங்களை எங்கும் அனுப்பலாம்.

முக்கிய குறிப்புகள்

  • சந்திரயான்-3 திட்டத்தின் மொத்த செலவு - ரூ.615 கோடி
  • திட்ட இயக்குனர் வீர முத்துவேல்
  • விண்கலம் ஏவப்படும் ராக்கெட்டின் பெயர் - Geosynchronous Satellite Launch Vehicle Mark III எனப்படும் LVM 3
  • விண்கலத்தின் எடை - 3,895 கிலோ
  • லேண்டரின் பெயர் - விக்ரம்
  • ரோவரின் பெயர் - பிரக்யான்



Card image cap
  • ஆகஸ்ட் 15, 2003: அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்சந்திரயான் திட்டத்தை முதன்முதலாக அறிவித்தார்.
  • அக்டோபர் 22, 2008சந்திரயான்-1 திட்டம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
  • நவம்பர் 8, 2008: சந்திரயான் -1 விண்கலம் வெற்றிகரமான நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
  • நவம்பர் 14,2008: சந்திரயான்-1 விண்கலத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
  • ஆகஸ்ட் 28, 2009: சந்திரயான் -1 திட்டம் நிறைவுபெற்றதாக இஸ்ரோ அறிவித்தது.
  • ஜூலை 22, 2019: சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது.
  • ஆகஸ்ட் 20, 2019: சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
  • செப்டம்பர் 2, 2019: நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100 கிமீ உயரே விக்ரம் லேண்டர் விடுவிக்கப்பட்டது. ஆனால்  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லேண்டர் கலன் நிலவின் தரையில் மோதி உடைந்தது.
  • ஜூலை 14, 2023: சந்திரயான்-3 விண்கலம் LVM 3-M 4 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • ஆகஸ்ட் 23/24, 2023: அன்றைய தினம் தான் நிலவின் மேல்பரப்பில் சந்திரயான் -விண்கலம் நிலை கொள்ளும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.





// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran