போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 13-07-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  13-07-2023


தேசியம் :-


Card image cap

  • பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்றுபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு நடைபெறும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறார்.
  • பிரான்ஸ் இந்தியா இடையே 1998- ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட  கூட்டு ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டை கொண்டாடும் நிலையில் பிரதமர் மோடியின் பயணம் அமைய உள்ளது.
  • இந்த பயணத்தின்போதுஇந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலுக்காக 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
  • பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் ஜூலை 15-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.

முக்கிய குறிப்பு

  • பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம்(Bastille Day) ஆண்டுதோறும் ஜூலை 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதுநம் நாட்டில் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவுக்கு இணையானது.
  • இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் இரண்டாவது இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
  • கடந்த 2009-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்



சர்வதேசம் :-


Card image cap
  • உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11 அன்று  கடைப்பிடிக்கப்பட்ட நிலையில்பல பரிமாண ஏழ்மை குறியீட்டு (Multidimensional Poverty Index) அறிக்கையை ஐ.நா.வின் வளா்ச்சித் திட்ட (UNDP) அமைப்பும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் ஏழ்மை-மனித மேம்பாடு (OPHI) அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளது.
  • உலக நாடுகளில் கல்விசுகாதாரம்வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களில் காணப்படும் ஏழ்மை நிலை குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
  • முக்கியமாக இந்தியாவில்கடந்த 2005-06 முதல் 2019-21 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 41.5 கோடி பேரை ஏழ்மை நிலையில் இருந்து விடுவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா உள்பட 25 நாடுகளில் ஏழ்மை நிலையில் வாழும் மக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்

  • ஆய்வு செய்யப்பட்ட மொத்த நாடுகள் - 110
  • ஏழைகளின் எண்ணிக்கை - சுமாா் 110 கோடி
  • மொத்த மக்கள்தொகையில் ஏழைகளின் சதவீதம் 18%
  • ஏழைகளில் பாதி போ் (53.4 கோடி) சஹாராவைச் சேராத ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கின்றனா்
  • தெற்காசிய நாடுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான ஏழைகள் (38.9 கோடி) வசிக்கின்றனா்.
  • நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கும் ஏழைகள்- 73 கோடி
  • குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கும் ஏழைகள்- 38.7 கோடி

பல பரிமாண ஏழ்மை குறியீட்டு(MPI) காரணிகள்

சுகாதாரம்

  • ஊட்டச்சத்து
  • சிசு மரணங்கள்

கல்வி

  • பள்ளி செல்லும் ஆண்டு
  • பள்ளி வருகை சதவீதம்

வாழ்க்கைத்தரம்

  • சமையல் எரிபொருள் பயன்பாடு
  • சுத்தமான இருப்பிடம்
  • குடிநீா் வசதி
  • மின்சார வசதி
  • வீட்டு வசதிசொத்துகள்
விருதுகள் :-


Card image cap
  • இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பு சார்பில்தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் 19-வது ஆண்டு சர்.ஜெ.சி.போஸ் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
  • இதில்சைபர் பாதுகாப்பு துறையில் சிறந்த பங்காற்றியமைக்காக சென்னை IIT இயக்குநர் வி.காமகோடி, எலும்பியல் துறை பங்களிப்புக்காக டாக்டர் எஸ்.ராஜசேகரன் ஆகியோருக்கு சர்.ஜெ.சி.போஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-


Card image cap
  • டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நீதிபதிகள் உஜ்ஜால் புயான்எஸ்.வெங்கட்டநாராயண பாட்டீ ஆகியோா் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமிக்கப்பட்டனா்.
  • இதற்கான அறிவிப்பை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டாா்.
  • இவ்விரு நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக முறைப்படி பதவியேற்கும் நிலையில்உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக அதிகரிக்கும்.

 

உச்சநீதிமன்றம் தொடர்பான முக்கிய குறிப்புகள்

  • உச்சநீதிமன்றம் செயல்பட தொடங்கிய ஆண்டு - ஜனவரி 28,1950
  • இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த 1935-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு பதிலாக உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது.
  • உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டில் இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை - 8
  • தற்போதுள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை - 34 (1 தலைமை நீதிபதி + 33 நீதிபதிகள்)
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரம் உள்ள அமைப்பு - நாடாளுமன்றம்
  • உச்சநீதிமன்றதின் முதல் தலைமை நீதிபதி - ஹெச்.ஜே.கனியா
  • உச்சநீதிமன்றதின் முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி(1989)
  • தற்போதைய தலைமை நீதிபதி(50-வது) - டி.ஒய். சந்திரசூட்
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு- 124(2)
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர்- குடியரசு தலைவர்
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களின் தகுதி - 5 ஆண்டுகளுக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ 10 ஆண்டுகளுக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவோ பணியாற்றியிருக்க வேண்டும்.
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது - 65

விளையாட்டுச் செய்திகள் :-

Card image cap
  • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் நேற்று(ஜூலை 12) தொடங்கியது.
  • இதில் ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் நடை பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • அவர்பந்தய தூரத்தை 29 நிமிடம் 33.26 விநாடிகளில் கடந்தார்.

Card image cap
  • காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வருகிறது.
  • இதில் மகளிருக்கான 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் 176 கிலோ (ஸ்நாட்ச் பிரிவில் 78 கிலோஜெர்க் பிரிவில் 98 கிலோ) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
  • மற்றொரு இந்திய வீராங்கனையான ஜிலி தலபெஹரா 169 கிலோ எடையை தூக்கி (75 94) வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
  • ஆடவருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முகுந்த் அஹர் 239 கிலோ (106 133) எடையை தூக்கி தங்கம் வென்றார்.
  • மகளிருக்கான 45 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் கோமல் கோஹர் 154 கிலோ (68 86) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
  • இதில்  இந்தியாவுக்கு முதல் நாளில் தங்கம், 4 வெள்ளி என 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran