10 - ஆம் வகுப்பு அறிவியல் அலகு - 22 சுற்றுச்சூழல் மேலாண்மை சிறுதேர்வு

10 - ஆம் வகுப்பு 

அறிவியல் 

அலகு - 22  சுற்றுச்சூழல் மேலாண்மை

        சிறுதேர்வு     

  

மொத்த  மதிப்பெண்கள்: 30

இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கா@aன 0இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது


 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.         

 

                                       10 × 1 = 10



1.கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருள்கள்

I) தார்

II) கரி

III) பெட்ரோலியம்


அ)  I மட்டும்

ஆ) I மற்றும் II 

இ) II  மற்றும் III

ஈ) I,II, III


2.வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்

I) கார்பன் மோனாக்ஸைடு

III) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்

II) சல்பர் டை ஆக்ஸைடு


அ) I மற்றும் II

ஆ) I மற்றும் III

இ)  II மற்றும் III

ஈ) I,II மற்றும் III


3. மண்ணரிப்பைத் தடுக்க பயன்படுவது

அ) காடுகள் அழிப்பு

ஆ) காடுகள்/மரம் வளர்ப்பு

இ) அதிகமாக வளர்த்தல்

 ஈ) தாவர பரப்பு நீக்கம்


4. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்

அ) பெட்ரோலியம்

ஆ) கரி

இ) அணுக்கரு ஆற்றல்

ஈ) மரங்கள்


5. மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்

அ) மழைப்பொழிவு இல்லாத இடம்

ஆ) குறைவான மழைப்பொழிவு உள்ள இடம் 

இ) அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்

ஈ) இவற்றில் எதுவுமில்லை


6.கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/ வளங்கள்

அ) காற்றாற்றல்

ஆ) மண்வளம்

இ) வன உயிரி

ஈ) மேலே உள்ள அனைத்தும்


7. கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம்/ மூலங்கள்

அ) மின்சாரம்

ஆ) கரி

இ) உயிரி வாயு

ஈ) மரக்கட்டை மற்றும் விலங்குகளின் கழிவு


8. பசுமை இல்ல விளைவு என குறிப்பிடுவது

அ) பூமி குளிர்தல்

ஆ) புற ஊதாக்கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல்

இ) தாவரங்கள் பயிர் செய்தல்

ஈ) பூமி வெப்பமாதல்


9. மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்

அ) நீர் ஆற்றல்

ஆ) சூரிய ஆற்றல்

இ) காற்றாற்றல்

ஈ) வெப்ப ஆற்றல்


10.புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு

அ) கடல் மட்டம் உயர்தல்

ஆ) பனிப்பாறைகள் உருகுதல்

இ) தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்

ஈ) மேலே கூறிய அனைத்தும்


II. சுருக்கமாக விடையளி.           6 x 2 = 12


11. மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும் விளைவுகள் யாவை

12. மின்னணுக் கழிவுகள் எவ்வாறு உற்பத்தியாகின்றன?

13.மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள் யாவை?

14.உயிரி வாயுவை பயன்படுத்துவதற்கான நன்மைகள் யாவை?

15.காடழிப்பினால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?

16.கழிவு நீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?


III விரிவான விடையளி.              2x 4 = 8


17. காடுகளின் முக்கியத்துவம் பற்றி கூறுக.


18. மழை நீர் சேமிப்பு அமைப்புகள் எவ்வாறு நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன?



       வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க 


You Have To Wait 30 Seconds.


Generating Download Link...


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran