10 - ஆம் வகுப்பு அறிவியல் அலகு - 21 உடல் நலம் மற்றும் நோய்கள் சிறுதேர்வு

10 - ஆம் வகுப்பு 

அறிவியல் 

அலகு - 21  உடல் நலம் மற்றும் நோய்கள்

        சிறுதேர்வு     

  

மொத்த  மதிப்பெண்கள்: 30

இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கா@aன 0இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது


 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.         

 

                                       10 × 1 = 10



1.புகையிலைப் பழக்கம் அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்கு காரணமான காரணி

அ) நிக்கோட்டின்

ஆ) டானிக் அமிலம்

இ) குர்குமின்

ஈ) லெப்டின்


2.உலக புகையிலை எதிர்ப்பு தினம் 

அ) மே 31

ஆ) ஜூன் 6

இ) ஏப்ரல் 22

ஈ) அக்டோபர் 2


3.சாதரண செல்களைவிட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில்

அ) வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை

ஆ) பிளவுக்கு உட்படுவதில்லை

இ) திடீர் மாற்றமடைந்த செல்கள்

ஈ) துரித செல் பிரிதல் தன்மை கொண்டவை


4. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை

அ) கார்சினோமா 

ஆ) சார்க்கோமா

 ) லுயூக்கோமியா

ஈ) லிம்போமா


5. அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது

அ) ஞாபக மறதி

ஆ) கல்லீரல் சிதைவு

இ) மாயத் தோற்றம்

ஈ) மூளைச் செயல்பாடு குறைதல்


6. இதயக்குழல் இதய நோய் ஏற்படக் காரணம்

அ) ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று 

ஆ) பெரிகார்டியத்தின் வீக்கம்

இ) இதய வால்வுகள் வலுவிழப்பு

ஈ) இதய தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை


 7. எபிதீலிய செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு என்று பெயர்

அ) கார்சினோமா

ஆ) சார்க்கோமா

இ) லுயூக்கோமியா

ஈ) லிம்போமா


8.மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது.

அ) வீரியமிக்க கட்டி 

ஆ) தீங்கற்ற கட்டி

இ) அ மற்றும் ஆ

ஈ) மகுடக் கழலை நோய்


9. பாலிபேஜியா என்ற நிலை ல் காணப்படுகிறது

அ) உடற்பருமன்

ஆ) டயாபடீஸ் மெலிடஸ் 

இ) டயாபடீஸ் இன்சிபிடஸ்

ஈ) எய்ட்ஸ்


10. மது அருந்தியவுடன் உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி

அ) கண்கள் 

ஆ) செவி உணர்வு பகுதி 

இ) கல்லீரல்

ஈ) மைய நரம்பு மண்டலம்

 

II.சுருக்கமாக விடையளி          6 x 2 = 12


11.மனோவியல் மருந்துகள் என்றால் என்ன

12.மெட்டாஸ்டாசிஸ் என்றால் என்ன?

13. HIV பரவக்கூடிய பல்வேறு வழிகள் யாவை? 

14.புற்று செல் சாதாரண செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

15.வகை -1 மற்றும் வகை -2 நீரிழிவு நோய்களை வேறுபடுத்துக.


16. இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூறுக.


III விரிவான விடையளி.         2 x 4 = 8


17. மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வதற்கான தீர்வைத் தருக.


18. இதய நோய்கள் ஏற்பட காரணம் வாழ்க்கை முறையே ஆகும். இதை சரிசெய்ய தீர்வுகள் தருக.



வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க 

You Have To Wait 30 Seconds.


Generating Download Link...


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran