10 - ஆம் வகுப்பு அறிவியல் அலகு - 20 இனக்கலப்பு (ம) உயிரித்தொழில்நுட்பவியல் சிறுதேர்வு

10 - ஆம் வகுப்பு 

அறிவியல் 

அலகு - 20  இனக்கலப்பு (ம) உயிரித்தொழில்நுட்பவியல்

        சிறுதேர்வு     

  

மொத்த  மதிப்பெண்கள்: 30

இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது


 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.         

 

                                       8 × 1 = 8 


1.ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையை பின்பற்றுவார்?

அ) போத்துத் தேர்வு முறை
ஆ) கூட்டுத் தேர்வு முறை 
இ) தூய வரிசை தேர்வு முறை
ஈ) கலப்பினமாக்கம்


2. பூசா கோமல் என்பது
 ___________ன் நோய் எதிர்ப்புத்திறன் பெற்ற ரகம்

அ) கரும்பு
ஆ) நெல்
இ) தட்டைப்பயிறு
ஈ) மக்காச்சோளம்


3. கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட துரு நோய்க்கு எதிர்ப்புத்தன்மைப் பெற்ற ஹிம்கிரி ன் ரகம்

அ) மிளகாய்
ஆ) மக்காச்சோளம்
இ) கரும்பு
ஈ) கோதுமை


4. தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி

அ) IR 8 
ஆ) IR 24 
இ) அட்டமிட்டா 2
ஈ) பொன்னி


5.உயிரித்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

அ) உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி
ஆ) வாழும் உயிரினங்கள்
இ) வைட்டமின்கள்
ஈ) அ மற்றும் ஆ

6. DNA வை வெட்ட பயன்படும் நொதி

அ) கத்தரிக்கோல்
ஆ) ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோ நியூக்ளியேஸ்
இ) கத்தி
ஈ) RNA நொதி

7. rDNA  என்பது ____________

அ) ஊர்தி DNA
ஆ) வட்ட வடிவ DNA
இ) சாட்டிலைட் DNA
ஈ) ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA வின் சேர்க்கை


8. DNA விரல்ரேகை தொழில் நுட்பம் DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது

அ) ஓரிழை
ஆ) திடீர் மாற்றமுற்ற
இ) பல்லுருத்தோற்ற
ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்


9.மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்  _____________என அழைக்கப்படுகின்றன

அ) அயல் ஜீனைப் பெற்ற உயரினங்கள்
ஆ) மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
இ) திடீர் மாற்றம் அடைந்தவை
ஈ) அ மற்றும் ஆ

10.ஹெக்ஸாபிளாய்டி கோதுமையில் ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத்தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே

அ) n = 7 மற்றும் x = 21
ஆ) n = 21 மற்றும் x = 21
இ) n=7 மற்றும் x = 7
ஈ) n = 21 மற்றும் x = 7



II. சுருக்கமாக விடையளி.             6 x 2 = 12


11.மரபுப் பொறியியல் வரையறு

12. குருத்தணுக்களின் வகைகளை எழுதுக.

13.நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் பற்றி விவரி

14.வேறுபடுத்துக. உடல் செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை

15.டி.என்.ஏ விரல் ரேகை தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை
எழுதுக.

16.உட்கலப்பு மற்றும் வெளிக்கலப்பு -வேறுபடுத்துக.

III விரிவான விடையளி                       2x 4 =8

17.விலங்குகளில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் யாவை?

18. மருத்துவத் துறையில் உயிர்தொழில்நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.



வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க 




You Have To Wait 30 Seconds.


Generating Download Link...


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran