10 - ஆம் வகுப்பு அறிவியல் அலகு - 18 மரபியல் சிறுதேர்வு

10 - ஆம் வகுப்பு 

அறிவியல் 

அலகு - 18 மரபியல்

        சிறுதேர்வு     

  

மொத்த  மதிப்பெண்கள்: 30

இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது


 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.         

 

                                       8 × 1 = 8




1. மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்கண்ட பண்புகளை பெற்றுள்ளன.

அ) ஒரு ஜோடி ஜீன்கள்

ஆ) பண்புகளை நிர்ணயிப்பது 

இ) மரபணுக்களை உருவாக்குவது

(ஈ) ஒடுங்கு காரணிகள்


2.எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?

அ) பிரிதல்

ஆ) குறுக்கே கலத்தல்

இ) சார்பின்றி ஒதுங்குதல்

ஈ) ஒடுங்கு தன்மை


3. செல் பகுப்படையும்போது ஸ்பிண்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி.

அ) குரோமோமியர்

ஆ) சென்ட்ரோசோம் 

இ) சென்ட்ரோமியர்

ஈ) குரோமோனீமா


4.சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது __________வகை குரோமோசோம்

அ) டீலோ சென்ட்ரிக்

ஆ) மெட்டா சென்ட்ரிக்

இ) சப் -மெட்டா சென்ட்ரிக்

ஈ) அக்ரோ சென்ட்ரிக்


5. டி.என்.ஏ வின் முதுகெலும்பாக உள்ளது __________________.

அ) டீ ஆக்ஸி ரைபோ சர்க்கரை

ஆ) பாஸ்பேட்

இ) நைட்ரஜன் காரங்கள்

ஈ) சர்க்கரை பாஸ்பேட்


6.ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது.

அ) ஹெலிகேஸ்

ஆ) டி.என்.ஏ பாலிமெரேஸ்

இ) ஆர்.என்.ஏ பிரைமர்

ஈ) டி.என்.ஏ லிகேஸ்


7. மனிதரில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ___________

அ) 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

ஆ) 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்கள்

இ)46 ஆட்டோசோம்கள்

ஈ) 46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்


8. பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் என அழைக்கப்படுகிறது

அ) நான்மய நிலை

ஆ) அன்யூபிளாய்டு

இ) யூபிளாய்டு

ஈ) பல பன்மய நிலை


II. சுருக்கமாக விடையளி.       5 x 2 = 10


9. அல்லோசோம்கள் என்றால் என்ன?

10. ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?

11.தாவரங்கள் மற்றும் விலங்குகளில் யூபிளாய்டு நிலை சாதகமானதாக ஏன் கருதப்படுகிறது?

12. பீனோடைப், ஜீனோடைப் அற்றி நீவிர் அறிவது என்ன?

13. மெண்டல் தன் ஆய்விற்கு ஏன் தோட்டப் பட்டாணிச் செடியைத் தேர்ந்தெடுத்தார்?


III விரிவான விடையளி.    3 x 4 = 12


14.குரோமோசோமின் அமைப்பை விவரிக்கவும்.

15. தகுந்த எடுத்துக்காட்டுடன் இரு பண்பு கலப்பை விளக்குக. இது ஒரு பண்பு கலப்பிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது

16.டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது. டி.என்.ஏ வின் உயிரியல் முக்கியத்துவம் யாது?



வினாத்தாளை PDF  வடிவில் பதிவிறக்க




You Have To Wait 30 Seconds.


Generating Download Link...


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran