10 - ஆம் வகுப்பு அறிவியல் அலகு - 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கம் சிறுதேர்வு

10 - ஆம் வகுப்பு 

அறிவியல் 

அலகு - 17 தாவரங்கள்  மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கம்

        சிறுதேர்வு     

  

மொத்த  மதிப்பெண்கள்: 30

இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது


 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.         

 

                                       10 × 1 = 10




1. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் ___________

அ) வெங்காயம்

ஆ) வேம்பு

இ) இஞ்சி

ஈ) பிரையோஃபில்லம்


2. பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் _____________

அ) அமீபா

ஆ) ஈஸ்ட்

இ) பிளாஸ்மோடியம்

ஈ) பாக்டீரியா


3. சின்கேமியின் விளைவால் உருவாவது _________

அ) சூஸ்போர்கள்

இ) சைகோட் (கருமுட்டை)

ஆ) கொனிடியா

ஈ) கிளாமிடோஸ்போர்கள்


4. மலரின் இன்றியமையாத பாகங்கள்

அ) புல்லி வட்டம், அல்லி வட்டம்

ஆ) புல்லி வட்டம், மகரந்தத்தாள் வட்டம்

இ) அல்லி வட்டம், சூலக வட்டம்

ஈ) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்


5. காற்றின் மூலம் மகர்ந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்

அ) காம்பற்ற சூல்முடி

ஆ) சிறிய மென்மையான சூல்முடி

இ) வண்ண மலர்கள்

ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி


6.இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?

அ) இருமயம் கொண்டவை

ஆ) பாலுறுப்புகளை உருவாக்குபவை

இ) ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன

ஈ) இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன


7.விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) எபிடைமிஸ்

ஆ) விந்து நுண் நாளங்கள்

இ) விந்து குழல்கள்

 ஈ) விந்துப்பை நாளங்கள்


8. விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சி அடைந்த செல்

அ) முதல்நிலை விந்து வளர் உயிரணு

ஆ) செடோலி செல்கள்

இ) லீடிக் செல்கள்

ஈ) ஸ்பெர்மெட்டோகோனியா


9. ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது

அ) பிட்யூட்டரியின் முன்கதுப்பு 

ஆ) முதன்மை பாலிக்கிள்கள்

இ) கிராஃபியன் பாலிக்கிள்கள்

ஈ) கார்பஸ் லூட்டியம்


10. கீழ்கண்டவற்றுள் எது IUCD?

அ) காப்பர் - டி

ஆ) மாத்திரைகள்

இ) கருத்தடை திரைச்சவ்வு

ஈ) அண்டநாளத் துண்டிப்பு


I சுருக்கமாக விடையளி.                       6 x 2 = 12


11. மூவிணைவு வரையறு

12. பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரின் பண்புகள் யாவை?

13.உடல இனப்பெருக்கம் ஏன் குறிப்பிட்ட தாவரங்களில் மட்டும் நடைபெறுகிறது?

14. ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்க உறுப்புகள் யாவை? 

15. தாயின் கருப்பையில் வளர்கின்ற கருவானது எவ்வாறு ஊட்டம் பெறுகிறது.

16.கருத்தடையின் தேவை என்ன?


III விரிவான விடையளி.               2 x 4 = 8


17. பூக்கும் தாவரத்தில் உள்ள சூலகத்தின் அமைப்பை விளக்குக.

18. மாதவிடாயின் சுழற்சி நிலைகள் யாவை? அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும் கருப்பையில் நிகழும் மாற்றங்களை குறிப்பிடுக.


                                                                 வினாத்தாளை  Pdf வடிவில்                                பதிவிறக்க 


You Have To Wait 30 Seconds.


Generating Download Link...


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran