10 - ஆம் வகுப்பு அறிவியல் அலகு - 19 உயிரின தோற்றமும் பரிணாமமும் சிறுதேர்வு

10 - ஆம் வகுப்பு 

அறிவியல் 

அலகு - 19  உயிரின தோற்றமும் பரிணாமமும்

        சிறுதேர்வு     

  

மொத்த  மதிப்பெண்கள்: 30

இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது


 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.         

 

                                       6 × 1 = 6





1. உயிர் வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி

அ) தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்

ஆ) தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது

இ) தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது

ஈ) தனி உயிரி வரலாறு மற்றும் தொகுதி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை


2.பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டை முன்மொழிந்தவர்

அ) சார்லஸ் டார்வின்

ஆ) எர்னஸ்ட் ஹெக்கல்

இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

ஈ) கிரிகர் மெண்டல்


3.பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்கு பயன்படுகிறது

அ) கருவியல் சான்றுகள்

ஆ) தொல் உயிரியல் சான்றுகள்

 இ) எச்ச உறுப்பு சான்றுகள்

 ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்


4. தொல் உயிர் படிவங்களின் காலத்தை அறிய உதவும் தற்போதைய முறை 

அ) ரேடியோ கார்பன் முறை

ஆ) யுரேனியம் காரிய முறை

இ) பொட்டாசியம் ஆர்கான் முறை

ஈ) அ மற்றும் இ


5. வட்டார இன தாவரவியல் என்ற சொல்லைமுதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார் ?

அ) கொரானா

ஆ) JW கார்ஸ் பெர்கர்

இ) ரொனால்டு ராஸ்

(ஈ) ஹியுகோ டி விரிஸ்


6. பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர்

அ) சார்லஸ் டார்வின்

ஆ) எர்னஸ்ட் ஹெக்கல்

இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

ஈ) கிரிகர் மெண்டல்


II. சுருக்கமாக விடையளி.       6 x 2 = 12    


7. வேறுபடுத்துக ; அமைப்பு ஒத்த உறுப்புகள் மற்றும் செயல் ஒத்த உறுப்புகள்

8. புதை உயிர் படிவங்களின் பதிவுகள் நமக்கு பரிணாமம் பற்றி தெரிவிக்கின்றன  எவ்வாறு?

9. கிவி பறவையின் சிதைவடைந்த இறக்கைகள் ஒரு பெறப்பட்ட பண்பு. ஏன் அது பெறப்பட்ட பண்பு என அழைக்கப்படுகிறது?

10. ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன் கருதப்படுகிறது?

11. புதை உயிர் படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்.

12.வேறுபாடுகள் என்றால் என்ன?


III விரிவான விடையளி.        3 x 4 = 12


13. படிவமாதல் தாவரங்களில் எவ்வாறு நடைபெறுகிறது.

14.பரிணாமத்திற்கான உந்து விசையாக இயற்கைத் தேர்வு உள்ளது எவ்வாறு?

15. வட்டார இன தாவரவியல் என்பதனை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக.


வினாத்தாளை PDF  வடிவில் பதிவிறக்க


You Have To Wait 30 Seconds.


Generating Download Link...


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran