10 - ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 - ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?



10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in    இணைதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளாலாம். மதிப்பெண்ணை பார்த்த பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என அறிந்து கொள்ளுங்கள்

கொரோன நோய் தொற்றால் பல்வேறு துறைகளை பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், 10-ஆம் வகுப்பிற்க்கு பிறகு என்ன படிக்கலாம் என்ற சிந்தனை மாணவர்களுகும், பெற்றோர்களுக்கும் உள்ளது.

இப்போதைய சூழ்நிலையில், தொழில் நுட்ப துறை (Technical jobs) மற்றும் இணைய வணிகம் (e- Commerce) ஆகியவை வளர்ந்து வரும் துறைகளாக உள்ளது. எனவே மாணவர்கள் நம்பிக்கையுடன் மேற்படிப்பு படிக்கலாம்.

தொழில் நுட்ப துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள், +1 -ல் கணித (Maths) பிரிவை தேர்ந்தெடுக்கலாம். அல்லது டிப்ளோமாவில் குறிபிட்ட பிரிவுகளை (முழு விபரம் இறுதியில் உள்ளது) தேர்ந்தெடுக்கலாம்.

இணைய வணிகம் (e- Commerce) , சிறு தொழிலில் (small business) ஆர்வம் உள்ள மாணவர்கள் +1 -ல் கணக்குப்பதிவியல், வணிகவியல் (Commerce, Accountancy) போன்ற பாடங்கள் உள்ள பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம்.

மாணவரின் திறமையை அடிப்படையாக கொண்டே வரும் காலங்களில் வேலை வாய்ப்புகள் இருக்கும். எனவே பெற்றோர்களே! என் பிள்ளைக்கு கணக்கு வராது, ஆங்கிலம் வராது, என தயவு செய்து சொல்லாதீர்கள். நல்ல வேலை வாய்ப்புகளை பெற கணித அறிவும் , ஆங்கில அறிவும் மிக மிக அவசியம். எனவே நமது பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவையும், கணித அறிவையும் எப்படி வளர்ப்பது என்பதை சிந்தியுங்கள். எளிய முறையில் ஆங்கிலம், கணிதம் கற்க்கும் வழிமுறைகள் இணையதளங்களில் இலவசமாக கிடைகின்றது. அதை நீங்களும் கற்று பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.

மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), சட்டம் (Law) ஆகிய படிப்புகளை இந்தியாவின் தலை சிறந்த கல்லூரிகளில் படிக்க நுழைவு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுப்பது அவசியம். தேசிய அளவில் நடத்தப்படும் எந்த நுழைவு தேர்விலும் வெற்றி பெற 2 ஆண்டு பயிற்சி அவசியம் எனவே +1 படிக்கும் போதே நுழைவு தேர்வுகளுக்கும் சேர்த்து படியுங்கள்

10-ஆம் வகுப்பிற்க்கு பிறகு என்ன படிக்கலாம் என்பதை விரிவாக பார்ப்போம்.

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (Certificate courses)

I. மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :

மேல் நிலை படிப்பில் சேரும் முன் மாணவர்கள் அவர்களின் இலக்கை தேர்வு செய்து கொள்ளுங்கள். வருங்காலத்தில் என்ன பட்ட படிப்பு படிக்க வேண்டும், எந்த துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்க்கு ஏற்ற பிரிவை தேர்ந்தெடுங்கள். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர் அறிவியல் (pure science) பிரிவில் சேர்ந்தால் +2 விற்க்கு பிறகு பொறியியல் படிக்க முடியாது. எனவே எதிர்காலத்தில் படிக்க நினைக்கும் துறையை தீர்மானித்துவிட்டு அதற்க்கு ஏற்றார் போல் பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். பிரிவுகள் வாரியான துறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு (PCM Biology) : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு இது. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Pharm, Indian medicines etc…), சட்டம் (Law), ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேற்படிப்பு படிக்கலாம். எதிர்காலத்தில் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தால் First Group எடுக்கலாம், ஏனெனில் பெரும்பாலான பட்ட படிப்புகளுக்கு தகுதியாக இந்த பிரிவு இருக்கும், நீங்கள் விரும்பும் பட்ட படிப்பு படிக்க இந்த பிரிவு உதவியாக இருக்கும்.

அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ள பிரிவு, எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த பிரிவு கிடைக்காவிட்டால், இந்த பிரிவு கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு (PCM Computer science) : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது. மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் சேர்வதற்க்கு ஏற்ற பிரிவுகளில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : Pure Science என சொல்லப்படும் இந்த பிரிவு மூலம் மருத்துவம் (MBBS, BDS, B.Pharm, Indian medicines etc…) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது. மருத்துவம் சார்ந்த துறைகள், ஆராய்ச்சி துறைகளில் வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு.

4. வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளாதாரவியல் (Commerce, Accountancy, Economics) பிரிவு : B.Com, CA (Charted accountant), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, பொருளாதார, கணக்கியல் துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கான படிப்புகள் படிக்க ஏற்ற பிரிவு. இணைய வணிகம் (e-Commerce) துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த பிரிவை தேர்ந்தெடுக்கலாம்

5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A, சட்ட படிப்பு, மேலாண்மை படிப்பு போன்ற படிப்புகள் படிக்கலாம். பொருளாதார துறையில் வேலை வாய்ப்பு, மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பிற்க்கான தேர்வுகள் எழுதி வெற்றி பெற ஆர்வம் இருந்தால் இந்த பிரிவை தேர்ந்தெடுக்கலாம். ஆங்கில மொழி திறனை வளர்த்துகொண்டால் அலுவலக வேலை வாய்ப்பு பெற முடியும்.

6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் மற்றும் இதர படிப்புகள் அடங்கிய பிரிவு, Vocational குரூபில் உள்ள குறிபிட்ட சில பிரிவுகள் மூலம் பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இதை விருப்ப பிரிவாக எடுத்துகொள்ளாதீர்கள், வேறு பிரிவு கிடைக்கவில்லை என்றால் இதில் சேருங்கள்.

II. பட்டய படிப்பு (Diploma) :

இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன.

தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, plastic engineering etc… போன்ற துறைகள் பல்வேறு துறைகள் உள்ளன. டிப்ளோமா படித்து முடித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable). 12-ஆம் வகுப்பு முடித்து பொறியியல் (B.E) படிக்கவும், 10- ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்க வேண்டாம்.

டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது. டிப்ளமோ முடித்து பணியில் சேர்ந்து கொண்டு பகுதி நேர படிப்பாக பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம்.
பெரும்பாலான மருத்துவ துறை டிப்ளோமா படிப்புகள் +2 விற்க்கு பிறகே படிக்க இயலும். +2 விற்க்கு பிறகு டிப்ளோமா படிப்பு 2 ஆண்டுகள்.

கொரோனா தொற்றால் சில துறைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதால் , EEE, ECE, Mechanical, Auto-mobile ஆகிய பிரிவுகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம்

III. சான்றிதழ் படிப்பு (Certificate courses):

மாணவர்களை பட்ட படிப்புவரை படிக்கவைய்யுங்கள். இது போன்ற சான்றிதழ் படிப்புகளில் சேர்த்து அவர்களின் படிப்பை நிருத்திவிடாதீர்கள். ஓர் ஆண்டிற்க்குள் சம்பாதித்துதான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை என கருதுபவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். இது ஓராண்டு படிப்பு. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ITI-களில் பல்வேறு சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

சில தொழில் நுட்ப படிப்புகள் : Mechanic Refrigeration And Air- Conditioning, Footwear Maker, Plastic Mould Maker, Machine Operator (Plastics Recycling), Jewellery And Precious Metal Worker, Fitter, Turner, Machinist, Electrician, Welder etc...................

இன்னும் மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகள் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? என்ற தொடர் கட்டுரைகளின் 10-ஆம் பகுதி இது. 

இன்னும் பல கட்டுரைகள் வெளிவர உள்ளது அனைத்தையும் படித்து பயன் பெற கீழே உள்ள Whatsapp  குரூப்பில் இணையவும்.








// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran