எட்டாம் வகுப்பு வரலாறு ஐரோப்பியர்களின் வருகை

 எட்டாம் வகுப்பு 

வரலாறு 

ஐரோப்பியர்களின் வருகை




ஐரோப்பியர்கள் இந்திய வருகை

இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பழங்காலம் முதல் வாணிபம் நடைபெற்று வருகிறது. வாணிபம் மேற்கொள்ள வந்த ஐரோப்பியர்கள் பின்பு இந்திய அரசியலிலும் ஈடுபட்டு இந்தியர்களை ஆள ஆரம்பித்தனர்.போர்ச்சுகீசியர்கள்,டச்சுக்காரர்கள்,ஆங்கிலேயர்கள்,டேனியர்கள்,பிரெஞ்சுக்காரர்கள் போன்ற ஐரோப்பிய நாட்டினர் இந்தியாவில் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். இவர்கள் ஐரோப்பா கண்டதிலிருந்து கடல்வழிப் பயணம் மேற்கொண்டு இந்தியா வந்தவர்களாவர்.

போர்ச்சுகீசியர்கள்

       வாஸ்கோடகமா

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதன்முதலில் ஈடுபட்டவர்கள் போர்ச்சுகீசியர்கள். போர்ச்சுகீசிய மன்னரான ஹென்றி தனது கப்பல் மாலுமிகளை புதிய கடல்வழி பயணத்தை ஊக்குவித்ததன் காரணமாக வாஸ்கோடகாமா என்ற மாலுமி மே-27-1498 -ல் நன்னம்பிக்கை முனையை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள கள்ளிகோட்டையை அடைந்தார்.அப்போதைய கள்ளிகோட்டை மன்னரான சாமரின் போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்ய அனுமதி அளித்தார்.கள்ளிகோட்டை,கண்ணனூர்,கொச்சி ஆகிய இடங்களில்போர்ச்சுகீசியர்கள் வாணிக நிலையங்களை நிறுவி வணிகம் மேற்கொண்டனர்.


டச்சுக்காரர்கள்

டச்சுக்காரர்கள் என்பவர்கள் ஹாலந்து நாட்டைச் சார்ந்தவர்கள் ஆவர் .இவர்கள் 1602-ல் டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டு, இந்தியாவில் மசூலிப்பட்டினம்,புலிகாட்,சூரத்,காரைக்கால்,நாகப்பட்டினம்,கசிம்பசார் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினர்.ஆங்கிலேயர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளாக போட்டி நிலவியது.எனவே தங்கள் வாணிக மையங்களை ஆங்கிலேயர்களுக்கு விற்றுவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.


ஆங்கிலேயர்கள்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ஆங்கிலேயர்கள்.1609-ல் இங்கிலாந்திலிருந்து கேப்டன் வில்லியம் ஹாகின்ஸ் ஜகாங்கீரின் அரசவைக்கு வந்தார்.போர்ச்சுகீசியர்களின் தூண்டுதலினால் ஆங்கிலேயர்களுக்கு முதலில் அனுமதி தர மறுத்தாலும் 1612-ல் ஜகாங்கீரிடம் அனுமதி பெற்று ஆங்கிலேயர்கள் 1613 -ல் சூரத்தில் வணிக நிலையத்தை நிறுவினர்.இது முதல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி 1858 -வரை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.


டேனியர்கள்

டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள் டேனியர்கள் ஆவர்.1620 -ல் தரங்கம்பாடியில் டேனிஷ் வணிக நிலையம் நிறுவப்பட்டது. இந்தியாவில் அவர்களது வணிக நிலையங்களை விரிவுபடுத்தவில்லை. எனவே 1845-ல் தங்களது குடியேற்றங்களை ஆங்கிலேயர்களுக்கு விற்றுவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.

பிரெஞ்சுக்காரர்கள்

பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயி மன்னரின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழு 1664 -ல் அமைக்கப்பட்டது. இவர்கள் 1668-ல் சூரத்திலும் 1669-ல் மசூலிப்பட்டினத்திலும் வாணிபத் தளங்களை நிறுவினர்.1673 -ல் பாண்டிச்சேரியில் வணிக நிலையங்களை நிறுவினர்.பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போட்டி நிலவியது.இது இந்தியாவில் கர்நாடக போர்களாக மாறின.இறுதியில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றனர்.பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.





// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran