திருக்குறளைப் பற்றிய சிறப்பு வினாடி வினா

 திருக்குறளைப் பற்றிய சிறப்பு வினாடி வினா

எத்தனைதான் நூலிருந்தும் உலகினிலே
திருக்குறள் போல் வருமா??
வாழ்வின் வரைமுறை இன்பம் யாவும்
பிற நூலெதுவும் தருமா??

நீதி நெறி புகட்டிட பல நூலிருந்தும்
முன்மாதிரி நூல்திருக் குறளாம்
எண்பது மொழிகளிலே மொழி பெயர்ப்பாம்
என்பதிலும் மூன்றாமிடமிதன் சிறப்பாம்!!!

மதம், இனம் யாவையுமே
கடந்த பொது நூலாம் - குறள்
நல் அறத்தினையே நிறுத்திருக்கும்
உண்மை துலாக் கோலாம்!!!

தந்தை மகனுக்காற்றுமுதவி
யாதெனவும் உரைக்கும்
மகன் கடமையோடு சேர்த்து குறள்
பண்பும் பயனும் விளக்கும்!!!

பெண்ணீயத்தை பல்லாண்டின் முன்னே
வலியுறுத்தி சொன்ன குறளாம்
திருவள்ளுவரும் உலக மக்களுக்கே
நல்கி சென்ற பெரும் அருளாம்!!!

மாதா, பிதா, குரு தெய்வமொடு
சத்யம், தர்மம் யாவும் குறள் பேசும்
குறள் கூறாத விடயமெதுவுமில்லை - இதன்
வழிநடக்க வாழ்வு மணக்கும் முல்லை!!!

அறம் பொருள் இன்பமொடு
வாழ்வதனை வள்ளுவமும் சொல்லும்
அதன் வழி நடக்க நடக்க - வாழ்வில்
நெருங்கிடுமோ துளியும் துன்பம்??

பொக்கிஷமாம் பொதுமறைக்கு
உலகில் ஈடு இணை ஏது ??
அருள் வழி காட்டி நிற்கும்
பொதுமறை திருக்குரளுக்குதான் நிகரேது??

நன்னெறியை பகலுமிந்த
நூலை நாளும் படிப்போம்
படித்த வழி நடந்து நாமும்
பகுத்தறிவில் வாழ்வை கழிப்போம்!!!

// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran