வினா விடை 10ஆம் வகுப்பு அலகு 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்



பத்தாம் வகுப்பு



அலகு 17 


தாவரங்கள் மற்றும் விலங்குகளில்  இனப்பெருக்கம் 


காணொலியை காண👇👇👇



25 வினாக்களுக்கான வினாடி வினா இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது


1. கீழ்கண்டவற்றுள் தாவரங்களின் இனப்பெருக்கத்தின் வகைகள் யாவை?

A. உடல இனப்பெருக்கம்

B. பாலிலா இனப்பெருக்கம்

C. பாலினப் பெருக்கம்

D. மேற்கண்ட அனைத்தும்

 

2. உடலை இனப்பெருக்கத்தில் எத்தகைய செல்பகுப்பு நடைபெறுகிறது?

A. மைட்டாசிஸ்

B. மியாசிஸ்

C. மேற்கண்ட இரண்டும்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

3. தாவரங்களின் ஆண் பெண் என செல்கள் இணைந்து தன்னைப் போன்ற புதிய தாவரத்தை உருவாக்கும் முறை எது?

A. பாலிலா இனப்பெருக்கம்

B. பாலினப் பெருக்கம்

C. உடல இனப்பெருக்கம்

D. மேற்கண்ட அனைத்தும்

 

4. மலரின் ஆண் இனப்பெருக்க பகுதி எது?

A. புல்லி வட்டம்

B. அல்லி வட்டம்

C. மகரந்தத்தாள் வட்டம்

D. சூலக வட்டம்

 

5. மலரின் பெண் இனப்பெருக்க பகுதி எது?

A. புல்லி வட்டம்

B. அல்லி வட்டம்

C. மகரந்தத்தாள் வட்டம்

D. சூலகம்

 

6. ஒவ்வொரு சூலகமும் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?

A.5

B.3

C.4

D.2

 

7. சூலகத்தின் கருப்பையில் எத்தனை செல்கள்,உட்கருக்கள் அமைந்துள்ளன?

A.7 செல்களும் 8 உட்கருக்களும்

B.9 செல்களும் 5 உட்கருக்களும்

C.5 செல்களும் 3 உட்கருக்களும்

D.8 செல்களும் 9 உட்கருக்களும்

 

8. பூவின் மகரந்த பையிலிருந்து மகரந்தத்தூள் சூலக முடியை சென்று அடைவது என்ன?

A. கருவுறுதல்

B. பாலினப் பெருக்கம்

C. மகரந்தச் சேர்க்கை

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

9. கீழ்கண்டவற்றுள் மகரந்தச் சேர்க்கையின் வகைகள் யாவை?

A. தன் மகரந்தச் சேர்க்கை

B. வெளி மகரந்த சேர்க்கை

C. அயல் மகரந்த சேர்க்கை

D.A&C

 

10. தன் மகரந்த சேர்க்கைக்கு எடுத்துக்காட்டு என்ன?

A. ஆப்பிள்

B. திராட்சை

C. பிளம்

D. ஹைபிஸ்கஸ்

 

11. அயல் மகரந்தச் சேர்க்கை எடுத்துக்காட்டு எவை?

A. ஆப்பிள்

B. திராட்சை

C. பிளம்

D. மேற்கண்ட அனைத்தும்

 

12. காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. எண்டோமோஃபிலி

B. ஹைட்ரோஃபிலி

C. அனிமோஃபிலி

D. சூஃபிலி

 

13. தேனீக்கள் ஈக்கள் முதலான பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?

A. எண்டோமோஃபிலி

B. ஹைட்ரோஃபிலி

C. அனிமோஃபிலி

D. சூஃபிலி

 

14. பூச்சிகள் வெளி மகரந்தச் சேர்க்கையில் தேனீக்கள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை அளவு என்ன?

A.30%

B.40%

C.50%

D 80%

 

15. நீரின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கையின் பெயர் என்ன?

A. எண்டோமோஃபிலி

B. ஹைட்ரோஃபிலி

C. அனிமோஃபிலி

D. சூஃபிலி

 

16. நீர்வழி மகரந்தச் சேர்க்கைக்கு எந்த தாவரங்களில் நடைபெறுகிறது?

A. ஹைட்ரில்லா

B. வாலிஸ்நீரியா

C. ஆகாயத்தாமரை

D.A&B

 

17. விலங்குகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கையின் பெயர் என்ன?

A. எண்டோமோஃபிலி

B. ஹைட்ரோஃபிலி

C. அனிமோஃபிலி

D. சூஃபிலி

 

18. ஒவ்வொரு விந்தகத்தையும் சூழ்ந்துள்ள நாரிழைத்திசு  அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. ஹயலுரானிடேஸ்

B. டியூனிகா அல்புஜினியா

C. விட்டலின் சவ்வு

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

19. விந்து உருவாக்கத்திற்கு தேவையான உணவு ஊட்டத்தை அளிப்பது எது?

A. லிடிக் செல்கள்

B. அக்ரோசோம்

C. செர்டோலி செல்கள்

D.டியூனிகா அல்புஜினியா

 

20. விந்தணுவாக்க நிகழ்வு எங்கு நடைபெறுகிறது?

A. விந்து குழல்

B. எபிடிடைமஸ்

C. செமினிபெரஸ் குழல்கள் 

D. விந்துப்பை

 

21. விந்து செல்லின் அமைப்பு எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

A. தலை

B. நடுப்பகுதி

C. வால்

D. மேற்கண்ட அனைத்தும்

 

22. விந்து செல்லில் சுருங்கிய உட்கரு எங்கு உள்ளது?

A. தலை

B. நடுப்பகுதி

C. வால்

D.A&B

 

23. விந்து செல்லில் தொப்பி போன்ற முன் முனைப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. லிடிக் செல்கள்

B. அக்ரோசோம்

C. செர்டோலி செல்கள்

D. சோனா பெலுசிடா

 

24. விந்து செல்லில் தலையையும் நடு பகுதியையும் இணைக்க என்ற குறுகிய கழுத்து பகுதி எது?

A. லைசோசோம்

B. ரிபோசோம்

C. சென்ட்ரியோல்

D. சைட்டோபிளாசம்

 

25.அண்டமானது எத்தனை சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது?

A.5

B.4

C.2

D.3

 

26.அண்டத்தின் மேற்புற படலத்தின் சவ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. விட்டலின் சவ்வு

B. சோனா பெலுசிடா

C. கரோனா ரெடியோட்டா

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

27.கரோனா ரெடியோட்டா எதனால் ஆனது ?

A. பாலிக்கிள் செல்கள்

B. லிடிக் செல்கள்

C. செர்டோலி செல்கள்

D.A&C

 

28. ஆண்களின் பருவம் அடைதல் எப்போது நடைபெறுகிறது?

A.10-12 வயதிற்குள்

B.13-14 வயதிற்குள்

C.15-16 வயதிற்குள்

D.11-12 வயதிற்குள்

 

29. பெண்களின் பருவம் அடைதல் எப்போது நடைபெறுகிறது?

A.11-13 வயதிற்குள்

B.10-12 வயதிற்குள்

C.13-14 வயதிற்குள்

D.12-13 வயதிற்குள்

 

30. மனிதனின் கர்ப்ப காலம் எவ்வளவு?

A.260 நாட்கள்

B.120 நாட்கள்

C.280 நாட்கள்

D.170 நாட்கள்


சிறப்பு வினாடி வினாவில் பங்கு பெற 👇👇👇



// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran