போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 21-07-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 21-07-2023


தேசியம்:-


Card image cap

  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கியவுடன் மாநிலங்களவை துணைத் தலைவா்கள் குழுவை அவையின் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கா்  மாற்றியமைத்தாா்.
  • இந்த மாற்றத்தின்படி பி.டி.உஷாஎஸ்.பங்கோன் கொன்யக்பெளசியா கான்சுலதா டியோவி.விஜய்சாய் ரெட்டிகன்ஷியாம் திவாரிஎல்.ஹனுமந்தியாசுகெந்து சேகா் ராய் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் மாநிலங்களவை துணைத் தலைவா்கள் குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
  • இவர்களில்4 பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் மாநிலங்களவை வரலாற்றில் முதன்முறையாக பாலின சமத்துவம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தக் குழுவில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பெண் உறுப்பினர்களும் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள்.
  • எஸ் பாங்னோன் கொன்யாக்நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மாநிலங்களவை விதிகளின்படிஅவையில் தலைவா் அல்லது துணைத் தலைவா் இல்லாத நிலையிலும் அவா்கள் சாா்பில் கேட்டுக்கொள்ளப்படுவதன் அடிப்படையிலும் அவையை தொடா்ந்து வழிநடத்துவதற்காக அவை உறுப்பினா்களிலிருந்து இத்தகைய துணைத் தலைவா்கள் குழுஅவைத் தலைவா் சாா்பில் அவ்வப்போது அமைக்கப்படுவது நடைமுறை.

மாநிலங்களவை பற்றிய குறிப்புகள்

  • மாநிலங்களவை நடைமுறைக்கு வந்த ஆண்டு - ஏப்ரல் 3, 1952 
  • முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு -  மே 13 , 1952
  • மொத்த உறுப்பினர்கள் : 250 மிகாமல் இருத்தல் வேண்டும்
  • தற்போதுள்ள உறுப்பினர்கள் : 245
  • இதில் 233 உறுப்பினர்கள்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • நியமன உறுப்பினர்கள் : 12 ( மத்திய அரசின் பரிந்துரையின்படி கலைஇலக்கியம்அறிவியல்விளையாட்டு என்று துறைசார் சாதனையாளர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்)
  • மாநிலங்களவையின் தலைவராகச்செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்
  • ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும்  தேர்ந்தெடுக்கப்பட  வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசியலமைப்பின் நான்காவது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது
  • உறுப்பினராவதற்க்கு குறைந்தபட்ச்ச வயது - 30
  • உறுப்பினர்களின் பதவி காலம் - 6 ஆண்டுகள்
  • உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர்.
  • மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்கள் கொண்ட மாநிலம் - உத்திர பிரதேசம்(31)
  • மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் எண்ணிக்கை - 18
  • மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கொண்ட யூனியன் பிரதேசம் - டெல்லி(3) மற்றும் புதுச்சேரி(1)



Card image cap
  • இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார எம்.எல்.ஏ. மற்றும் ஏழை எம்.எல்.ஏ-க்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms -ADR) ஆய்வு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
  • 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேச எம்எல்ஏ-க்கள் குறித்த தகவல் இதில் இடம்பெற்றுள்ளது.
  • மொத்தம் 4,033 எம்எல்ஏக்களில் 4,001 எம்எல்ஏக்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டுள்ளன

ஆய்வறிக்கையின் முக்கிய குறிப்புகள்

  • கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், 1,413 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பணக்கார எம்எல்ஏ-வாக முதலிடத்தில் உள்ளார்.
  • இந்தியாவின் மிக ஏழையான எம்.எல்.ஏ -  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நிர்மல் குமார் தாரா(இவரின் சொத்து மதிப்பு ரூ.1,700 மட்டுமே)
  • நாட்டின் முதல் 20 பணக்கார எம்.எல்.ஏ-க்களில்12 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்.
  • கர்நாடக எம்எல்ஏக்களில் 14 சதவீதம் பேர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
  • இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு - ₹13.63 கோடி
  • குற்றவியல் வழக்குகள் இல்லாதவர்களின் சராசரி சொத்து மதிப்பை விட (ரூ. 11.45 கோடி) அதிகமான சொத்துகுற்றவியல் வழக்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் (ரூ.16.36 கோடி) உள்ளது.

தமிழ்நாடு:-


Card image cap

  • தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின்(Tamil Nadu Climate Change Mission) கீழ் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
  • இதன் ஒரு பகுதியாககாலநிலை மாற்ற பாதிப்பு மீட்டெடுக்கும் பசுமை புராதனச் சின்னங்கள் திட்டத்தை (Climate Resilient Green Temples/Monuments initiative) செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின்படிபுராதனச் சின்னங்களில் தட்ப வெப்ப நிலை தணிப்பு மற்றும் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • இதன்படிமதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் நாகை வேளாங்கண்ணி மாதா கோயில் ஆகியவற்றில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
  • இந்தத் திட்டத்தில்கோயில்களில் சூரிய சக்தி விளக்குகள்நீர் மேலாண்மைவெப்ப மேலாண்மைபசுமையாக்குதல்கோயில் குளங்களில் சுற்றுச்சூழல் மறு சீரமைப்புபிளாஸ்டிக்கை அகற்றுவதற்கான செயல்பாடுகள் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும்.
  • மேலும்பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்த கோயில் நந்தவனங்கள் வளப்படுத்தப்படும்.

முக்கிய குறிப்புகள்

  • தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்முதல்வர் ஸ்டாலின் அவர்களால் டிசம்பர் 8, 2022 - இல் தமிழ்நாடு காலநிலை மாற்ற மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission)தமிழ்நாடு ஈரநில இயக்கம்(Wetlands Mission)தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்(Climate Change Mission) ஆகிய மூன்று முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கத்துடன்இந்தியாவில் முதன்முதலாக 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தை' (Tamil Nadu Green Climate Company) தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
  • இத்திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள காடுளின் பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 விழுக்காடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பொருளாதாரம் :-


Card image cap

  • டாடா குழுமம் இந்தியாவுக்கு வெளியே முதன் முறையாக பேட்டரி ஆலை அமைக்க திட்ட மிட்டுள்ளதாக பிரிட்டன் அரசு  தெரிவித்துள்ளது.
  • இங்கிலாந்தின் சோமர்செட் மாகாணத்தில் ரூ.43,000 கோடி முதலீட்டில் ஐரோப்பாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் பேட்டரி செல் தயாரிப்பு ஆலையை டாடா குழுமம் அமைக்கவுள்ளது.
  • இந்த ஆலை 2026-இல் செயல்பாட்டுக்கு வரும்.
  • இதன் மூலம்4,000 பேருக்கு நேரடியாகவும்அதன் விநியோக சங்கிலித் தொடர் மூலம் ஆயிரக்கணக்கானோரும் வேலைவாய்ப்புகளை பெறுவர். இந்த முதலீட்டால் மின் வாகன சந்தை வளர்ச்சி அடையும்
  • டாடா குழுமத்தின் தலைவர் -  என்.சந்திரசேகரன்



நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

Card image cap

  • இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் புதிய நிா்வாக இயக்குநராக சத்பால் பானு நியமிக்கப்பட்டுள்ளாா்
  • இதுவரை அந்தப் பொறுப்பை வகித்து வந்த சித்தாா்த்த மொஹந்திநிறுவனத்தின் தலைவராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டாா். அதனைத் தொடா்ந்துதற்போது அந்தப் பதவிக்கு சத்பால் பானு நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • எல்ஐசி நிறுவப்பட்ட ஆண்டு - செப்டம்பர் 1, 1956


Card image cap
  • இந்திய கடலோர காவல்படையின் (ICG) 25 வது தலைமை இயக்குநராக ராகேஷ் பால் நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்திய கடலோர காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு - பிப்ரவரி 1, 1977

விளையாட்டுச் செய்திகள் :-


Card image cap
  • ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.
  • இதில் இந்தியாபாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
  • இந்த தொடருக்கான ‘பொம்மன்’ என்ற இலச்சினையைதமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.


Card image cap
  • பிரான்ஸில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பின்ஷிப்பைஇந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.
  • இந்தப் போட்டியில் இதுவே இந்தியாவின் அதிகபட்சமாகும். இதற்கு முன், 2019-இல் துபையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 9 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

பதக்க விவரங்கள்

  • தங்கம்: அஜீத் சிங்சுமித் (ஆடவா்/ஈட்டி எறிதல்)சச்சின் கிலாரி (ஆடவா்/குண்டு எறிதல்)
  • வெள்ளி: யோகேஸ் கதுனியா (ஆடவா்/வட்டு எறிதல்)நிஷாத் குமாா்ஷைலேஷ் குமாா் (ஆடவா்/உயரம் தாண்டுதல்)ரிங்கு (ஆடவா்/ஈட்டி எறிதல்)
  • வெண்கலம்: பிரவீண் குமாா் (ஆடவா்/உயரம் தாண்டுதல்)ஏக்தா அபியான் (மகளிா்/கிளப் த்ரோ)பூஜா (மகளிா்/ஈட்டி எறிதல்)




// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran