போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 24-07-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 24-07-2023


தேசியம் :-


Card image cap

  • ஜி20 நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் கூட்டம் கோவாவில் ஜூலை 22 அன்று நடந்தது.
  • இதில் ஜி20 நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள்சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற 9 நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள்சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 14 அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • இதற்கு மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தலைமை வகித்தார்.

இதில் வீடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

  • சூரிய மற்றும் காற்று மின்சாரம் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது.
  • அதேபோலபருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வலுவாக செயல்படுத்தி வருகிறது.
  • மரபு சாரா மின்சக்தி திறன் இலக்கை 9 ஆண்டுகளுக்கு முன்பாக அடைந்துவிட்டோம். தற்போது 2030-ஆம் ஆண்டுக்குள்மரபு சாரா எரிசக்தி திறனை 50 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
  • இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 11 கோடியே 90 லட்சம் குடும்பங்கள் சமையல் காஸ் இணைப்பை பெற்றுள்ளன.
  • ஒவ்வொரு கிராமத்திலும் மின் இணைப்பு இருக்க வேண்டும் என்ற மிகப் பெரிய இலக்கையும் நாங்கள் அடைந்துள்ளோம்.
  • எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை ஒரு சிறிய இயக்கமாக கடந்த 2015-ஆம் ஆண்டில் நாங்கள் தொடங்கினோம்.இது தற்போது உலகின் மிகப் பெரிய எல்இடி விளக்கு விநியோக திட்டமாக மாறியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 4,500 கோடி யூனிட்டுக்கும் மேற்பட்ட மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
  • மேலும்2025-ஆம் ஆண்டுக்குள், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் இந்தியா முழுவதும் கிடைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
  • பசுமை ஹைட்ரஜன் மூலம் கார்பன் வெளியேற்றம் அற்ற நாடாக மாறஇந்தியா திட்டமிட்ட இலக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.



Card image cap
  • நீண்ட காலம் முதலமைச்சர் பதவியில் இருந்தவர்கள் பட்டியலில் ஒடிசா முதலமைச்சரான நவீன் பட்நாயக் இப்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
  • தொடா்ச்சியாக 5 முறை முதலமைச்சரான பட்நாயக் 2000ஆவது ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி முதல் முறையாக ஒடிசா முதலமைச்சராகி23 ஆண்டுகள் 139 நாட்களாக அப்பதவியில் இருக்கிறார்.
  • மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சராக இருந்த சிபிஎம் காட்சியைச் சேர்ந்த ஜோதி பாசு 1977, ஜூன் 21 முதல் 2000, நவம்பா் 5 வரையில் 23 ஆண்டுகள் 138 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்துள்ளார்.
  • இந்த பட்டியலில் சிக்கிம் முன்னாள் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங் நாட்டிலேயே அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார். கடந்த டிசம்பர் 12, 1994இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர்மே 27, 2019 வரைஅதாவது 24 ஆண்டுகள் 166 நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார்.
  • அருணாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் கெகாங் அபாங் மொத்தம் 22 ஆண்டுகள் 250 நாட்கள் என முதலமைச்சராக பதவி வகித்து 4-வது இடத்திலும்அடுத்து மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் லால் தன்ஹாவ்லா மொத்தம் 22 ஆண்டுகள் 60 நாட்கள் முதலமைச்சராக இருந்து 5-வது இடத்திலும் உள்ளனர்.
  • இந்தப் பட்டியலில் மறைந்த திமுக தலைவரும்முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மொத்தம் 18 ஆண்டுகள் 362 நாட்கள் என 8-வது இடத்திலும்மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும்முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மொத்தமாக 14 ஆண்டுகள் 127 நாட்கள் என 24-வது இடத்திலும் உள்ளனர்.



சர்வதேசம் :-


Card image cap
  • பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தின் லோகோவை மாற்றினார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க்.
  • பாரம்பரிய நீலக் குருவிக்கு பதிலாக X’ என லோகோவை மஸ்க் மாற்றியுள்ளார்.
  • வரும் நாட்களில் ட்விட்டரின் (twitter.com) டொமைனை x.com என மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

முக்கிய குறிப்பு

  • ட்விட்டர் நிறுவனம் 2006-இல் ஆரம்பிக்கப்பட்டது . அதனை கடந்த ஆண்டு எலான் மஸ்க் வாங்கி இருந்தார்.




தமிழ் நாடு :-


Card image cap
  • மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை 2004 ஜூலை 24-இல் தொடங்கப்பட்டது.
  • இன்று 20-வது ஆண்டில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அடி எடுத்து வைக்கிறது.
  • அதன் 19-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
  • இதையொட்டிஉயர் நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் நீதிபதிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

முக்கிய குறிப்புக்கள்

  • உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு – 217
  • உயர் நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர்குடியரசுத் தலைவர்
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது- 62
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களின் தகுதி -  நீதி நிா்வாகப் பணியில் இந்திய நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புாிந்திருக்க வேண்டும்.
  • உயர் நீதிமன்றத்தின் நீதிப்பேராணை அதிகார வரம்பு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு(Writ Jurisdiction) - 226
  • சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஆகஸ்ட் 15,1862
  • இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றம் - கல்கத்தா உயர் நீதிமன்றம்( ஜூலை 1862)
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி - டி.முத்துச்சாமி(1877)
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திரத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட முதல் இந்திய தலைமை நீதிபதி - பி.வி.ராஜமன்னார்(1948)
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - கந்த குமாரி பட்நாகர்(1992)
  • சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு – 2004
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை: 75
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதி பரிபாலணம்(அதிகார வரம்பு எல்லை) - தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் புதுவை யூனியன் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது.
  • மிகப் பெரிய நீதிபரிபாலனம் கொண்ட உயர் நீதிமன்றம் - குவஹாத்தி உயர் நீதிமன்றம்(அசாம்அருணாச்சலப் பிரதேசம்நாகாலாந்துமிசோரம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது)
  • தனி நீதிமன்றம் கொண்ட ஒரே யூனியன் பிரதேசம் டெல்லி(1966)
  • இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு  பொதுவான உயர்நீதிமன்றங்களை அமைக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரமளித்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் - 7வது சட்டத்திருத்தம்,1956
  • இந்தியாவில் உள்ள மொத்த நீதிமன்றங்களின் எண்ணிக்கை – 25
  • 1891 -இல் சட்ட நிகழ்வுகள்தகவல்களை வெளியிடும் சட்ட செய்தி இதழ்(Madras Law Journal) உதயமான இடம் சென்னை உயர்நீதிமன்றம். இது தான் முதன் முதலில் தோன்றிய உயர் நீதிமன்ற சட்ட செய்தி இதழாகும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-
Card image cap
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISROPSLVGSLV ஆகிய ராக்கெட்டுகள் மூலம் ஆய்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
  • இதுதவிரவணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது.
  • அதன்படிசிங்கப்பூருக்குச் சொந்தமான DS-SAR எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் NSIL (Newspace India Limited) நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இந்த செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து PSLV C-56 ராக்கெட் மூலம் ஜூலை 30-ஆம் தேதி காலை 6 மணியளவில் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதில்முதன்மை செயற்கைக்கோளான DS-SAR செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது.
  • இதனுடன் VELOX-AM (23 கிலோ)ARCADE (24 கிலோ) உட்பட சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.

ISRO பற்றிய குறிப்புகள்

  • நிறுவனர்: விக்ரம் சாராபாய்
  • தலைமையகம்: பெங்களூரு
  • நிறுவப்பட்ட ஆண்டு : 15 ஆகஸ்ட் 1969
  • தற்போதைய தலைவர்: எஸ்.சோமநாத்

முக்கிய நாட்கள் :-

Card image cap
  • ஒவ்வோர் ஆண்டும்  ஜூலை 24-ஆம் தேதி வருமான வரி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கவும் மற்றும்  வரி செலுத்துதலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தினம் மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பாக இந்திய முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் வருமானவரி உருவான வரலாறு

  • 24 ஜூலை 1860 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த சர் ஜேம்ஸ் வில்சன் என்பவர் வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.
  • 1866-ஆம் ஆண்டுகவர்னர் ஜெனரல் டஃப்ரின், வருமான வரிச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதுதான் முறைப்படியான முதல் வரிச் சட்டம். இதில்லைசன்ஸ் வரிவருமான வரி என இரண்டுமே இருந்தன.
  • 1917-இல் பெரும் செல்வந்தர்களுக்கு என்று தனியாக ‘சூப்பர் டாக்ஸ்' விதிக்கப்பட்டது.
  • 1922-இல் ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்தபோதுஅடுத்த வருமானவரி சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதுதான் ‘முழுமையானவருமான வரிச் சட்டம். தற்போதுள்ள சட்டத்தின் தந்தை என்று சொல்லலாம்.
  • 1924-இல் மத்திய வருவாய் வாரியம் அமைக்கப்பட்டது.
  • சட்ட ஆணையம், 1922 சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து புதிய சட்டத்தைப் பரிந்துரைத்தது. அதன்படி வருமான வரிச் சட்டம், 1961 இயற்றப்பட்டதுஇது 1962-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
  • 1963-ஆம் ஆண்டுமத்திய வருவாய் வாரியத்தில் இருந்து மத்திய நேரடி வரி வாரியம் தனியாக உருவானது.
  • 1966-இல் புலனாய்வு இயக்ககம் (Directorate of Investigation) உருவானது.
  • 1994-இல் நிரந்தரக் கணக்கு எண் (PAN) அறிமுகமானது. இந்தியா முழுமைக்குமான இந்த எண்வருமான வரிக்குட்பட்ட நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்துவதில் முழு வெற்றி கண்டது.

வருமானவரி குறித்த தகவல்கள்

  • 1860-இல் வருவமான வரி அறிமுகமான முதல் ஆண்டில்அரசுக்கு 30 லட்சம் ரூபாய் வரியாக கிடைத்தது.
  • இந்தியா சுதந்திரம் பெறும்போது 1945-46-ஆம் ஆண்டுக்கான வருமான வரியாக 57 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது.
  • 1970-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1,000 கோடி ரூபாயும், 2000-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயும் வருமான வரியாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.
  • கடந்த நிதி ஆண்டில்(2022-23)  19.68 லட்சம் கோடி வருமான வரி  வசூலிக்கப்பட்டிருக்கிறது.
  • வருமான வரி  செலுத்துவதில் முதலிடத்தில் உள்ள  மாநிலம் - மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு 4-வது இடத்தில உள்ளது
  • தற்போது புதிய வரி விதிப்பு நடைமுறையில் தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது.

இராணுவம் :-

Card image cap
  • இந்தியா-வியட்நாம் இடையே ராஜீய ரீதியிலான நட்புறவு வலுப்பெற்று வரும் நிலையில்செயல்பாட்டில் உள்ள சிறிய போா்க்கப்பல் (கோா்வெட்) INS கிா்பானை வியட்நாமுக்கு பரிசாக இந்தியா ஜூலை 22 அன்று வழங்கியது.
  • செயல்பாட்டில் இருக்கும் சிறிய போா்க்கப்பலை நட்பு நாட்டுக்குப் பரிசாக இந்தியா வழங்குவது இதுவே முதல்முறை.

INS கிா்பான் பற்றிய குறிப்புகள்

  • 1991-ஆம் ஆண்டில் கிர்பான் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS கிா்பான்ஏவுகணைகளைச் செலுத்தும் திறனுடைய குக்ரி ரக போா்க்கப்பலாகும்
  • 1,450 டன் எடை,90 மீட்டர் நீளம், 10.45 மீட்டர் அகலம் கொண்ட இந்த போர்க்கப்பலில் 12 அதிகாரிகள், 100 மாலுமிகள் பணியாற்றினர்.

முக்கிய குறிப்புகள்

  • மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் - ராஜ்நாத் சிங்
  • இந்திய கடற்படைத் தளபதி - ஆா்.ஹரிகுமாா்
  • முப்படைகளின் தலைமை தளபதி - அனில் சவுகான்

// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran