10ஆம் வகுப்பு அறிவியல் அலகு 3 வெப்ப இயற்பியல்

 

பத்தாம் வகுப்பு 

அறிவியல் 

அலகு 3

வெப்ப இயற்பியல்


காணொலி👇👇👇



30 வினாக்களுக்கான வினாடி வினா இணைப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது

1.மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் என்ன?

 

A.வெப்பநிலை

B.குளிர்ச்சி                                     

C. பனி 

D.நீர்

 

2. கெல்வின் அளவுகோலில் உள்ள தனிச்சுழி வெப்பநிலையை பொறுத்து அளவிடப்படும் வெப்ப நிலை என்ன?

 

A.சீரான அலகு

B.வெப்பநிலை அளவுகோல்

C.இந்திரவியல் அளவுகோல்

D.தனித்த அளவுகோல்


3. வெப்ப இயக்கவியலில் வெப்பநிலையின் ஒரு அளவு என்பது நீரின் மும்மை புள்ளியில்

—----------பங்கு ஆகும்?

 

A.1/233.16

B.1/256.18

C.1/273.16

D.1/213.51


4. வெப்பம் என்பது ஓர் —------ அளவு ஆகும்?

 

A. மெட்ரிக்

B. ஸ்கேலார்

C. கேலன்

D. மீட்டர்

 

5. வெப்ப ஆற்றல் உட்கவருதல் அல்லது வெளியிடுதலின் SI அலகு என்ன?

 

A. மெட்ரிக்

B. ஸ்கேலார்

C. கேலன்

D. மீட்டர்

 

6. ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு என்ன?

 

A.10 கிலோ கலோரி

B.20 கிலோ கலோரி

C.1 கலோரி*

D.0.10 கலோரி

 

7. ஒரு கிலோ கிராம் இன்றையுள்ள நீரில் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு என்ன?

 

A.10 கிலோ கலோரி

B.20 கிலோ கலோரி

C.1 கிலோ கலோரி*

D.0.10 கிலோ கலோரி

8. திடப்பொருளில் ஏற்படும் வெப்ப விரிவு வகைகள் யாவை?

 

A. நீள் வெப்ப விரிவு

B. பரும வெப்ப விரிவு

C. பரப்பு வெப்ப விரிவு

D. மேற்கண்ட அனைத்தும்*

 

9. ஒரு திட பொருளை வெப்பப்படுத்துதல் மூலமாக அதன் நீளம் அதிகரித்தல் எத்தகைய வெப்ப விரிவு?

 

A. நீள் வெப்ப விரிவு*

B. பரும வெப்ப விரிவு

C. பரப்பு வெப்ப விரிவு

D. படிம வெப்ப விரிவு

 

10. ஓரலகு வெப்பநிலை உயர்வால்

பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு நிளத்திற்கும் உள்ள தகவு என்ன?

 

A. நீள் வெப்ப விரிவு குணகம்*

B. பரும வெப்ப விரிவு குணகம்

C. பரப்பு வெப்ப விரிவு குணகம்

D. படிம வெப்ப விரிவு குணகம்

 

11. நீள் வெப்ப விரிவு குணகத்தின் SI அலகு என்ன?

 

A. கெல்வின் ^-1*

B. கேண்டிலா

C. மீட்டர்

D. கேலன்

 

12. ஓர் அலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பரப்பில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பரப்பிற்கும் உள்ள தகவு என்ன?

 

A. நீள் வெப்ப விரிவு குணகம்

B. பரும வெப்ப விரிவு குணகம்

C. பரப்பு வெப்ப விரிவு குணகம்*

D. படிம வெப்ப விரிவு குணகம்

 

13. ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துவதன் மூலமாக பொருளின் பருமன் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு என்ன?

 

A. நீள் வெப்ப விரிவு 

B. பரும வெப்ப விரிவு* 

C. பரப்பு வெப்ப விரிவு 

D. படிம வெப்ப விரிவு

 

14. ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரளவு பருமனுக்கும் உள்ள தகவு என்ன?

 

A. நீள் வெப்ப விரிவு குணகம்

B. பரும வெப்ப விரிவு குணகம்*

C. பரப்பு வெப்ப விரிவு குணகம்

D. படிம வெப்ப விரிவு குணகம்

 

15. அலுமினியத்தின் பரும வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு என்ன?

 

A.7×10^-5*

B.20.7×10^-5

C.2.5×10^-5

D.6×10^-5

 

16. பித்தளையின் பரும வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு என்ன?

 

A.7×10^-5

B.20.7×10^-5

C.2.5×10^-5

D.6×10^-5*

 

17. கண்ணாடியின் பரும வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு என்ன?

 

A.7×10^-5

B.20.7×10^-5

C.2.5×10^-5*

D.6×10^-5

 

18. நீரின் பரும வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு என்ன?

 

A.7×10^-5

B.20.7×10^-5*

C.2.5×10^-5

D.6×10^-5

 

19. எந்த ஒரு கொள்கலனும் இல்லாமல் நேரடியாக திரவத்தினை வெப்பப்படுத்தும் போது ஏற்படும் வெப்ப விரிவு என்ன?

 

A. உண்மை வெப்ப விரிவு*

B. உண்மை வெப்ப விரிவு குணகம்

C. தோற்ற வெப்ப விரிவு

D. தோற்ற வெப்ப விரிவு குணகம்

 

 

 

20. ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மைப் பருமனுக்கும் அந்த திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் இடையே உள்ள தகவு என்ன?

 

A. உண்மை வெப்ப விரிவு

B. உண்மை வெப்ப விரிவு குணகம்*

C. தோற்ற வெப்ப விரிவு

D. தோற்ற வெப்ப விரிவு குணகம்

 

21.ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அந்த திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் இடையே உள்ள தகவு என்ன?

 

A. உண்மை வெப்ப விரிவு

B. உண்மை வெப்ப விரிவு குணகம்

C. தோற்ற வெப்ப விரிவு

D. தோற்ற வெப்ப விரிவு குணகம்*

 

22. வாயுக்களின் அழுத்தம் கன அளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் விதிகள் யாவை?

 

A. பாயில் விதி

B. சார்லஸ் விதி

C. அவகேட்ரா விதி

D. மேற்கண்ட அனைத்தும்*

 

23. சார்லஸ் விதியை நிறுவிய ஜேக்கஸ் சார்லஸ் எந்த நாட்டை சேர்ந்த அறிவியலாளர்?

 

A. இந்தியா

B. இத்தாலி

C. அமெரிக்கா

D. பிரென்ச்*

 

24. மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அந்த வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும் என்பது எந்த விதி?

 

A. பாயில் விதி

B. சார்லஸ் விதி*

C. அவகேட்ரா விதி

D. டெல்டா விதி

 

25. மாறா வெப்பநிலை மற்றும் மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவிலுள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர் தகவில் அமையும் என்பது எந்த விதி?

 

A. பாயில் விதி

B. சார்லஸ் விதி

C. அவகேட்ரா விதி*

D. டெல்டா விதி

 

26. ஒரு மோல் பொருளில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை —------- ஆகும்

 

A. டெல்டா எண்

B. அவகேட்ரோ எண்*

C. சார்லஸ் எண்

D. பாயில் எண்

 

27. அவகேட்ரோ எண்ணின் மதிப்பு என்ன?

 

A.6.024×10^23

B.6.023×10^23*

C.6.025×10^23

D.6.029×10^23

 

28. ஒன்றோடு ஒன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்கள்—----------

 

A. இயல்பு வாயுக்கள்

B. மாறிலி வாயுக்கள்

C. நல்லியல்பு வாயுக்கள்*

D. இடைவினை வாயுக்கள்

 

29.சார்லஸ் விதி பாயில் விதி அவகேட்ரோ விதிகளுக்கு உட்பட்ட வாயுக்கள் எவை?

 

A. இயல்பு வாயுக்கள்

B. மாறிலி வாயுக்கள்

C. நல்லியல்பு வாயுக்கள்

D. மேற்கண்ட அனைத்தும்*

 

30. பாதரசத்தின் பரும வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு என்ன?

 

A.7×10^-5

B.18.2×10^-5*

C.2.5×10^-5

D.6×10^-5

வினாடி வினாவில் பங்குபெற

You have to wait 30 seconds.

Generating Click Here Button...

 

// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran